fbpx

நெல்லையில் மீண்டும் சம்பவம் செய்யப்போகும் கனமழை..!! ஆட்சியர் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை..!!

நெல்லை மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து, கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

நாளை (ஜனவரி 9) தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதுதொடர்பாக நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் கார்த்திகேயன் கூறுகையில், ”திருநெல்வேலி மாவட்டத்தில் நாளை (ஜனவரி 9) மற்றும் நாளை மறுநாள் (ஜனவரி 10) கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே, ஆறுகளில் நீர்வரத்து அதிகரிக்கும் என்பதால் கரையோர மக்கள் பாதுகாப்பாகவும், கவனமாகவும் இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.

யாரும் ஆற்றில் இறங்கவோ, கால்நடைகளை இறக்கவோ வேண்டாம். அரசால் அவ்வப்போது வழங்கப்படும் எச்சரிக்கைகளை கவனத்தில் கொண்டு செயல்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.

Chella

Next Post

”நாளை இல்லை... இன்றே தொடங்கியது”..!! ”பேருந்துகள் ஓடவில்லை”..!! போராட்டத்தில் குதித்த போக்குவரத்து தொழிலாளர்கள்..!!

Mon Jan 8 , 2024
ஊதிய உயர்வு, அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் நாளை முதல் வேலைநிறுத்த போராட்டம் அறிவித்திருந்தன. இதற்கிடையே, இன்று போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் தமிழ்நாடு அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் தொழிலாளர் நலத்துறை சார்பில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால், இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனால், அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம் திட்டமிட்டபடி நாளை நடைபெறும் என தொழிற்சங்கங்கள் அறிவித்திருந்தன. ஆனால், […]

You May Like