fbpx

தமிழகத்தில் இன்றும், நாளையும் வெளுத்துவாங்க போகும் கனமழை!… வானிலை மையம் எச்சரிக்கை!

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் இன்றும், நாளையும் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று முதல் வரும் 15ம் தேதிவரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

Kokila

Next Post

PowerPoint மென்பொருளை உருவாக்கிய டென்னிஸ் ஆஸ்டின் காலமானார்!…

Mon Sep 11 , 2023
PowerPoint மென்பொருளை உருவாக்கிய டென்னிஸ் ஆஸ்டின் நுரையீரல் புற்று நோய் பாதித்து சிகிச்சை பெற்றுவந்த நிலையில் காலமானார். அவருக்கு வயது 76. மைக்ரோசாப்ட் பவர்பாயிண்ட் மென்பொருளானது, ப்ரொஜெக்டர்களில் அல்லது பெரிய திரைத் தொலைக்காட்சிகளில் காட்டப்படும் தொழில்முறை தோற்ற ஸ்லைடுகளை உருவாக்க பயன்படுகிறது. இந்த மென்பொருளின் தயாரிப்பு ஒரு விளக்கமாக அழைக்கப்படுகிறது. பவர்பாயிண்ட் என்பது எளிதான கற்றல் திட்டம் ஆகும், இது வணிகங்கள் மற்றும் வகுப்பறைகளில் விளக்கக்காட்சிகளை உலகளவில் பயன்படுத்தப்படுகிறது. பவர்பாயிண்ட் […]

You May Like