fbpx

இன்று 8 மாவட்டங்களில் கனமழை பெய்யுமாம்..!! இந்த லிஸ்ட்டில் உங்க மாவட்டமும் இருக்கான்னு பாருங்க..!!

தமிழ்நாட்டில் இன்றைய தினம் 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், மயிலாடுதுறை ஆகிய 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது. நாளை (ஆகஸ்ட் 6) 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. அதாவது ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் நாளைய தினம் கனமழை பெய்யக்கூடும் என கூறியுள்ளது.

சென்னையை பொறுத்தவரை இரண்டு நாட்களுக்கு நகரின் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை :

தமிழக கடலோரப்பகுதிகளில் இன்று முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் குறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Read More : 100 நாள் வேலைத்திட்டம்..!! தமிழ்நாடு அரசு வெளியிட்ட சூப்பர் குட் நியூஸ்..!!

English Summary

According to the Meteorological Department, there will be heavy rain in 8 districts of Tamil Nadu today.

Chella

Next Post

அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீன் மனு தள்ளுபடி..!! - டெல்லி உயர்நீதிமன்றம்

Mon Aug 5 , 2024
Delhi High Court dismisses bail plea by CM Arvind Kejriwal in excise case

You May Like