கனமழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாக தமிழகத்தில் இன்று பெரும்பாலான இடங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, திருவாரூர் மாவட்டத்தில் நேற்று மாலை முதல் கனமழை பெய்து வருவதால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
மேலும் தொடர்ந்து இன்று காலை முதல் கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கனமழையைத் தொடர்ந்து இன்று, திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி, இராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக்க வானிலை ஆய்வு மையம் அறிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Read More: IND vs SA!. ருதுராஜ் கெய்க்வாட் ஏன் இடம்பெறவில்லை!. ரகசியத்தை உடைத்த சூர்யகுமார் யாதவ்!