fbpx

கனமழை : “பதறும் காலம் மாறிவிட்டது” அமைச்சர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு..!

வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த மூன்று நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அவ்வப்போது மழையும், சில நேரங்களில் கன மழையும் பெய்யும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. மேலும் தமிழகத்திற்கு ஊன்இன்று ஆரஞ்சு அலர்ட்டும் கொடுத்திருந்தது. இந்நிலையில் இன்று தமிழகத்தின் பல பகுதிகளில் மலை பெய்து வருகிறது.

சென்னையில் மழை என்றதுமே வெள்ளம் வருமோ என்று பதறும் காலம் மாறிவிட்டது, திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் மேற்கொண்ட பணிகளே அதற்கு காரணம் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், “சென்னையில் மழை என்றதுமே வெள்ளம் வருமோ என்று பதறும் காலம் மாறிவிட்டது. தி.மு க. ஆட்சிப் பொறுப்பேற்றதும் மேற்கொண்ட பணிகளே அதற்குக் காரணம்! தூர்வாருதல், புதிதாக 876 கி.மீ.க்கு மழைநீர் வடிகால் அமைத்தது உள்ளிட்ட நமது அரசின் செயல்பாடுகளால் கனமழையின் தாக்கம் மக்களைப் பாதிக்காதவாறு தடுக்கப்பட்டுள்ளது.

அடுத்த சில நாட்களுக்குக் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், பெருநகர மாநகராட்சி உயர் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் என அனைவரும் களத்தில் மக்களுக்குத் துணை நின்று பணியாற்றிடவும். மக்களுக்குச் சிறு இன்னல் கூட ஏற்படாமல் தடுக்க #DravidianModel அரசு இருக்கிறது என்ற நம்பிக்கையை மேலும் வலுப்படுத்திடுவோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Kathir

Next Post

எப்போது ஐபிஎல் ஏலம்?… ஏலத்திற்கு முன்பே முக்கிய வீரரை தட்டித்தூக்கிய மும்பை!… வெளியான புதிய தகவல்!

Sat Nov 4 , 2023
2024 ஐபிஎல் சீசனுக்கான ஏலம் வரும் டிச. 19ம் தேதி நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ள நிலையில், ஏலத்திற்கு முன்னதாகவே வெஸ்ட் இண்டீஸ் வீரரான ரொமாரியோ ஷெப்பர்ட்-யை மும்பை அணி வாங்கியுள்ளது. 2024 இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) சீசனுக்கான வீரர்கள் ஏலம் அடுத்த மாதம் அதாவது டிசம்பர் 19ஆம் தேதி நடைபெறலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த முறை ஏலம் துபாயில் நடைபெறும் என தெரிகிறது. அதேநேரம், பெண்கள் […]

You May Like