fbpx

இடி மின்னலுடன் இந்த 4 மாவட்டங்களை மிரட்ட வரும் மிக கனமழை..!! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!

தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதேபோல், சேலம், நாமக்கல், கரூர், அரியலூர், கடலூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருச்சி, நிலகிரி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, பெரம்பலூர், நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 2ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, பெரம்பலூர், அரியலூர் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் செப்.3ஆம் தேதி முதல் 6ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Chella

Next Post

வாகன ஓட்டிகளே..!! இந்த மெசேஜ் உங்களுக்கும் வந்துருக்கா..? கொஞ்சம் மிஸ் ஆச்சுனாலும் பணம் போயிரும்..!! எச்சரிக்கையா இருங்க..!!

Thu Aug 31 , 2023
சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினர் சாலையில் வாகன ஓட்டிகளின் நடத்தையை சிசிடிவி மற்றும் ANPR கேமராக்கள் மூலமாக தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இந்த கேமராக்கள் போக்குவரத்து போலீசாரின் “மூன்றாவது கண்” ஆகவே செயல்பட்டு வருகின்றன. சென்னையில், பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களுக்காக 6,000-க்கும் மேற்பட்ட வழக்குகள் தினசரி பதிவு செய்யப்படுகின்றன. அனுமதிக்கப்பட்ட அளவைத் தாண்டி அதிவேகமாக வாகனங்களை இயக்கினாலோ, தலைக்கவசம் அணியாமலோ சென்றால், உங்களை கேமரா படம் பிடித்து அபராதம் கட்ட […]

You May Like