தமிழ்நாட்டின் நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டு பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகளால், 3 நாட்களுக்கு ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரண்டு நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு மற்றும் வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால், அந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Read More : பிளஸ் 2-வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் கவனத்திற்கு..!! கவலைய விடுங்க..!! இந்த தேர்வில் பாஸ் ஆகிறலாம்..!!