சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. சென்னையில் 2 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், தமிழ்நாட்டில் நாளை (டிச.6) முதல் மூன்று நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் வரும் டிசம்பர் 9ஆம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தமிழ்நாட்டில் அதிகபட்சமாக, திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லியில் 34 செ.மீ. மழையும், ஆவடியில் 28 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. தெற்கு ஆந்திரா கடற்கரையை பாபட்லாவிற்கு அருகே 4 மணி நேரத்தில் தீவிர புயலாகக் கரையைக் கடக்கக் கூடும்” என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.