fbpx

கனமழை எச்சரிக்கை..!! அரசு அலுவலர்களுக்கு விடுமுறை கிடையாது..!! தூத்துக்குடி ஆட்சியர் உத்தரவு..!!

தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், டிசம்பர் 30, 31, ஜனவரி 1 ஆகிய 3 நாட்கள் அரசுத்துறை அலுவலர்கள் விடுப்பு எடுக்கக் கூடாது என்று ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை (டிசம்பர் 30) முதல் 3 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த எச்சரிக்கையை தொடர்ந்து பதிவுத்துறை அரசு செயலாளர் ஜோதி நிர்மலா, ஆதிராவிடர் நலத்துறை செயலாளர் லட்சுமிபிரியா ஆகியோர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வதற்காக இன்று காலை விமானம் மூலம் தூத்துக்குடிக்கு விரைந்துள்ளனர்.

இதற்கிடையே, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி, அரசுத்துறை அலுவலர்கள் யாருக்கும் 3 நாட்களுக்கு விடுமுறை கிடையாது என அறிவித்துள்ளார். அனைத்து துறைகளை சார்ந்தவர்களும் இந்த 3 நாட்களும் கட்டாயம் பணியில் இருக்க வேண்டும். கிராம நிர்வாக அலுவலர்கள் தாங்கள் பணிபுரியும் கிராமத்திலேயே தங்கியிருக்க வேண்டும். வட்டாட்சியர் உள்ளிட்டோர் தங்கள் அலுவலகங்களில் இருக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Chella

Next Post

இதுவரை விஜயகாந்துக்கு நேரில் அஞ்சலி செலுத்தாத முன்னணி நடிகர்கள்..!! என்ன காரணம்..?

Fri Dec 29 , 2023
கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், சரத்குமார், இளையராஜா, கவுண்டமணி, லோகேஷ் கனகராஜ், விஜய் ஆண்டனி உள்ளிட்ட பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். ஆனால், அஜித், சூர்யா, விஷால், விக்ரம், சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயன் போன்ற நடிகர்கள் அஞ்சலி செலுத்தாது விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளது. தமிழ் சினிமாவில் தன்னலமற்ற ஹீரோவாக ஜொலித்தவர் கேப்டன் விஜயகாந்த். சினிமா மட்டுமின்றி, அரசியல், பொது வாழ்விலும் நிஜமான ஹீரோவாக மாஸ் காட்டினார். தன்னுடன் […]

You May Like