fbpx

12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..!! மக்களே குடையை மறந்துறாதீங்க..!!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நவம்பர் 27ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு, புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இன்று முதல் நவம்பர் 30ஆம் தேதி வரை 7 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக் கூடும் என தெரிவித்துள்ளது. திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதே போல் நவம்பர் 25ஆம் தேதி நாளை செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று சென்னையில் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

உஷார்..!! தமிழ்நாட்டில் 7,000 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிப்பு..!! அமைச்சர் சொன்ன அதிர்ச்சி தகவல்..!!

Sat Nov 25 , 2023
தமிழ்நாட்டில் டெங்கு பாதிப்பு இல்லை என்ற நிலை மாறி தற்போது நாள் ஒன்றுக்கு 40 முதல் 50 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்படுவதாகவும், ஜனவரியில் இருந்து தற்போது வரை 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”ஒவ்வொரு வாரமும் 1000 முகாம்கள் என ஆரம்பித்து, தற்போது அவசியத்திற்கு ஏற்ப 2 ஆயிரம் முகாம்கள் வரை நடத்தப்படுகிறது. கடந்த 4 வாரங்களில் […]

You May Like