தென்மாநில பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. கேரள கடலோர பகுதியை ஒட்டிய, தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல், வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும் நிலவுகிறது.இதன் காரணமாக, பெரும்பாலான மாவட்டங்களில், வரும் 8ஆம் தேதி வரை மிதமான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 10 முதல் 16 மாவட்டங்களில், இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யும் என்றும் சென்னையில் வானம் மேகமூட்டமாக காணப்படும் என்றும் அவ்வப்போது, இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்துார், சேலம், நாமக்கல், திருப்பூர், கரூர், தேனி, திண்டுக்கல், மதுரை, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது