fbpx

இன்று 6 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கப்போகுது..!! வானிலை ஆய்வு மையம் அலர்ட்..!!

தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கோவை, நீலகிரி, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் நாளை முதல் 6 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் 2 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும். சென்னையில் வடகிழக்கு பருவமழை 47 சதவீதம் அதிகமாக பெய்துள்ளது என்றும், அக்டோபர் 1ஆம் தேதி முதல் இன்று வரை இயல்பாக 731.9 மி.மீ. மழை பெய்திருக்க வேண்டிய நிலையில் 1079 மி.மீ. மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்று காலை வரை இயல்பை விட 3% குறைவாக பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது. அக்டோபர் 1ஆம் தேதி முதல் இன்று காலை வரை இயல்பாக 398.3 மி.மீ. பதிவாக வேண்டிய நிலையில் 385.9 மி.மீ. மட்டுமே பெய்துள்ளது.

Chella

Next Post

நிவாரண நிதி ரூ.6,000 கிடைப்பதில் புதிய சிக்கல்..!! மக்களே என்ன ஆச்சுன்னு தெரியுமா..?

Mon Dec 11 , 2023
மிக்ஜாம் புயல் வெள்ள நிவாரண நிதியை நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்த உத்தரவிடக்கோரி சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. புயல் எதிரொலியாக பெய்த கனமழையால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. பல்வேறு இடங்களில் வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் தங்களது உடமைகளை இழந்து தவித்து வருகின்றனர். இதையடுத்து, கனமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.6,000 நிவாரண உதவி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இந்நிலையில், […]

You May Like