fbpx

Rain: தமிழகத்தில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை..! வானிலை மையம் கொடுத்த எச்சரிக்கை…!

நாளை நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் நாளை மற்றும் நாளை மறுநாள் ஒருசில இடங்களிலும், 9-ம் தேதி ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் மணிக்கு 30 கிமீ முதல் 40 கிமீ வரை பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 10, 11 தேதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

வரும் 7-ம் தேதி நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களிலும், 8-ம் தேதி நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, தென்காசி, விருதுநகர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஒருசில இடங்களில் 109 டிகிரி, இதர தமிழக மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 104 டிகிரி, கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் அளவில் இருக்கக்கூடும். இன்று வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 104 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 87 டிகிரி பாரன்ஹீட் அளவை ஒட்டி இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

புதிய ரெக்கார்டு!… தோனியின் மிகப்பெரிய சாதனையை முறியடித்த ஜடேஜா!

Mon May 6 , 2024
Jadeja: பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் ஐபிஎல் வரலாற்றிலேயே தோனியின் மிகப்பெரிய சாதனையை முறியடித்து ரவீந்திர ஜடேஜா சாதனை படைத்துள்ளார். தரம்சாலாவில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான 53ஆவது லீக் போட்டி நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் சாம் கரண் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி சிஎஸ்கே முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 9 […]

You May Like