fbpx

இடி மின்னல், சூறைக்காற்றுடன் கனமழை..!! எங்கெங்கு தெரியுமா..? வானிலை மையம் சொன்ன குட் நியூஸ்..!!

வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அக்னி நட்சத்திரம் முடிவடைய இன்னும் 10 நாட்கள் உள்ளது. அனல் வெயில் பல ஊர்களில் வாட்டி வதைக்கிறது. சென்னை உள்ளிட்ட பல ஊர்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பம் பதிவாகி வருகிறது. ர்.

அக்னி வெயில் அனலை கக்கினாலும் ஆங்காங்கே குளிர்ச்சியூட்டும் வகையில் மழை பெய்து வருகிறது. பழனியில் கடந்த இரண்டு நாட்களாக கோடை மழை வெளுத்து வாங்கியது. இந்நிலையில், இன்றும் நாளையும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வெப்பநிலை இயல்பு நிலையில் இருந்து 2 – 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்குமென சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று முதல் 21ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்றைய தினம் இடி, மின்னல் சூறைக்காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Chella

Next Post

இளைஞர்களே..!! இந்தியாவில் மீண்டும் வருகிறது ’பப்ஜி’ விளையாட்டு..!! மத்திய அரசு அனுமதி..!!

Fri May 19 , 2023
இந்தியாவில் பாதுகாப்பு காரணமாக சீனச் செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டன. இதனால் டிக்டாக் உட்பட பல செயலிகளுக்கான தடை நீட்டிக்கப்பட்டு வருகிறது. ஆன்லைன் விளையாட்டுகளை பொறுத்தவரை பப்ஜி விளையாட்டுக்கு ரசிகர்கள் அதிகம். தென் கொரிய நாட்டை சேர்ந்த கிராப்டன் நிறுவனத்துக்கு சொந்தமானது பப்ஜி. இந்தியாவில் மிகக் குறுகிய காலத்திலேயே இளைஞர்கள் மத்தியில் அதீத வரவேற்பை பெற்றது. இந்தியா – சீனா இடையேயான எல்லை பிரச்சனை வலுவடைந்தபோது பல்வேறு சீன செயலிகளுக்கு மத்திய […]

You May Like