fbpx

தமிழ்நாட்டில் மீண்டும் சம்பவம் செய்யப்போகும் கனமழை..!! வானிலை ஆய்வு மையம் கொடுத்த வார்னிங்..!!

ஜனவரி 10ஆம் தேதி சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ஜனவரி 10ஆம் தேதி கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் இன்று முதல் வரும் 6ஆம் தேதி வரை கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 7, 8, 9 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை : தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 – 45 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 – 45 கிமீ வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Read More : ஞானசேகரன் அந்த சாரிடம் பேசியது உறுதி..!! சிறப்பு விசாரணைக் குழுவிடம் உண்மையை போட்டுடைத்த மாணவி..!!

English Summary

The Meteorological Department has warned of the possibility of heavy rain in some districts on January 10th.

Chella

Next Post

மூத்த விஞ்ஞானி.. அணு ஆயுத சோதனையில் முக்கிய பங்கு வகித்த ஆர். சிதம்பரம் காலமானார்.. யார் இவர்?

Sat Jan 4 , 2025
Senior scientist Rajagopala Chidambaram, who played a key role in India's nuclear weapons program, passed away today.

You May Like