தலைநகர் சென்னையில் கோடை வெயிலின் காரணமாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாயினர். இந்த நிலையில், திடீரென்று அங்கு பெய்த மழையின் காரணமாக, மக்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
மேற்கு திசை காற்று மற்றும் வெப்ப சரணம் காரணமாக கனமழை பெய்து வருகிறது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது சென்னை புறநகர் பகுதிகளான பூந்தமல்லி, வண்டலூர், சிங்கப்பெருமாள்கோவில்,அசோக் நகர், கோடம்பாக்கம், சைதாப்பேட்டை, வடபழனி போன்ற பகுதிகளில் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
சென்னை நகர் பகுதி முழுவதும் பெய்து வரும் மழையின் காரணமாக,, வெப்பம் குறைந்து குளிர்ச்சியான சூழ்நிலை காணப்படுகிறது. இந்த கனமழை அடுத்த 3 மணி நேரத்திற்கு செங்கல்பட்டு நாகை போன்ற ஒரு சில மாவட்டங்களில் நீடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.