fbpx

தமிழகத்தில் 5 நாட்களுக்கு கொட்டித் தீர்க்கும் மழை..!! எங்கெங்கு தெரியுமா..?

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக செப்டம்பர் 22, 23ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான, மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், 24 முதல் 26ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 5 நாட்களுக்கு கொட்டித் தீர்க்கும் மழை..!! எங்கெங்கு தெரியுமா..?

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், செப்டம்பர் 22ஆம் தேதி மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Chella

Next Post

நாடு முழுவதும் அதிரடி ரெய்டு..!! அவசர ஆலோசனையில் அமித்ஷா..!! அடுத்து நடக்கப்போவது என்ன?

Thu Sep 22 , 2022
நாடு முழுவதும் தேசிய புலனாய்வு அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, முக்கிய பாதுகாப்பு அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். தமிழகம், கேரளா உட்பட இந்தியா முழுவதும் 10-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ. சோதனை நடத்தி வருகிறது. எஸ்.டி.பி.ஐ. கட்சி அலுவலகங்கள், பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அலுவலகங்கள் இந்த சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. தமிழத்தில், கோவை, தேனி, ராமநாதபுரம், தென்காசி என […]
நாடு முழுவதும் அதிரடி ரெய்டு..!! அவசர ஆலோசனையில் அமித்ஷா..!! அடுத்து நடக்கப்போவது என்ன?

You May Like