fbpx

தீப்பிடித்து எரிந்த ஹெலிகாப்டர்..!! தமிழகத்தை சேர்ந்த மூவர் உள்பட 7 பேர் பலி..!! திடுக்கிடும் தகவல்..!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் இதுவரை 7 பேர் பலியாகி உள்ளனர்.

உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத் அருகே இன்று ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது. யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர், ருத்ரபிரயாக்கில் உள்ள கருட் சட்டி அருகே உள்ள கேதார்நாத் கோவிலில் இருந்து காலை 11.40 மணியளவில் புறப்பட்ட உடனேயே விபத்துக்குள்ளாகி உள்ளது. உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்புப் படையினர், விபத்து நடந்த இடத்திலிருந்து இதுவரை 6 யாத்ரீகர்கள் மற்றும் ஒரு விமானியின் உடல்களை மீட்டுள்ளனர்.

தீப்பிடித்து எரிந்த ஹெலிகாப்டர்..!! தமிழகத்தை சேர்ந்த மூவர் உள்பட 7 பேர் பலி..!! திடுக்கிடும் தகவல்..!!

கேதார்நாத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் ஹெலிகாப்டர் தீப்பிடித்ததாகவும், தீப்பிடிப்பதற்கு முன்பு பலத்த சத்தம் கேட்டதாக விமான ஒழுங்குமுறை அலுவலகம் தெரிவித்துள்ளன. மோசமான வானிலையால் ஹெலிகாப்டர் இயக்குவதில் ஏற்பட்ட சிரமங்கள்தான் விபத்துக்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆனால், விபத்துக்கான துல்லியமான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. விபத்து நடைபெற்ற இடத்தில் மீட்பு பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர். அவர்கள் சென்னையைச் சேர்ந்த கலா, சுஜாதா, பிரேம்குமார் என்பது தெரியவந்துள்ளது.

தீப்பிடித்து எரிந்த ஹெலிகாப்டர்..!! தமிழகத்தை சேர்ந்த மூவர் உள்பட 7 பேர் பலி..!! திடுக்கிடும் தகவல்..!!

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த யாத்ரீகர்கள் மற்றும் விமானிக்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி, உத்தரகாண்ட் முதல்வர் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Chella

Next Post

செம.. 18 வயது நிரம்பிய அனைவருக்கும் ரூ.500...! அரசு அறிவிப்பு

Wed Oct 19 , 2022
வரும் தீபாவளி பண்டிகைக்கு புதுச்சேரியில் உள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் 10 கிலோ அரிசி மற்றும் இரண்டு கிலோ சர்க்கரைக்கு பதிலாக அரசு ரொக்கமாக வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்தார். புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய ரங்கசாமி, 10 கிலோ அரிசி மற்றும் 2 கிலோ சர்க்கரைக்கு சமமான தொகை அட்டைதாரர்களின் வங்கி கணக்கில் டெபாசிட் செய்யப்படும் என்றார். தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் […]

You May Like