fbpx

பெண்களே… ரயில் பயணத்தின் போது உங்கள் பாதுகாப்பு இல்லையா…? உடனே இந்த எண்ணுக்கு கால் செய்யவும்…

காவல்துறை, பொது ஒழுங்கு ஆகியவை இந்திய அரசியல் சாசனத்தில் 7-வது அட்டவணையின் கீழ், மாநிலங்களின் கீழ் வருகிறது. அதனால் சட்டம், ஒழுங்கைப் பராமரித்தல், குற்றச்செயல்கள் குறித்த புலன்விசாரணை, பதிவு செய்தல், கைது நடவடிக்கை, தடுப்பு நடவடிக்கைகள் ஆகியவை மாநில அரசுகளின் பொறுப்பாகும்.

ரயில்வே காவல்துறை போன்ற சட்ட அமலாக்க முகமைகளின் வழியாக பாதுகாப்பை ரயில்வே பராமரித்து வருகிறது. ரயில்வே பாதுகாப்புப் படை பயணிகளின் பாதுகாப்பில் தனிக் கவனம் செலுத்தி வருகிறது. குறிப்பாக, பெண் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை ரயில்வே மேற்கொண்டு வருகிறது. அதன்படி ரயில்களில், ரயில்வே பாதுகாப்புப் படை காவல் துறையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ரயில் பயணிகளுக்கான பாதுகாப்புத் தொடர்பான உதவி எண் 139, 24 மணி நேரமும் இயங்கி வருகிறது.

பெண்களுக்கென ஒதுக்கப்பட்ட ரயில் பெட்டிகளில், ஆண் பயணிகள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. சமூக ஊடகங்கள் மூலம் ரயில்வே, பயணிகளுடன் தொடர்பில் உள்ளது. குற்றச்செயல்கள் குறித்து எச்சரிக்கையுடன் இருக்குமாறு அடிக்கடி அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. 5,882 ரயில் பெட்டிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

Vignesh

Next Post

’இனி தேசியக்கொடியை இரவிலும் பறக்க விடலாம்’..! உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

Sun Jul 24 , 2022
’நாட்டின் 75-வது சுதந்திர தின ஆண்டை முன்னிட்டு, தேசியக் கொடியை இரவிலும் பறக்க விடலாம்’ என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாட்டின் தேசியக்கொடியை சூரிய உதயத்தில் இருந்து பறக்கவிட்டு, சூரிய அஸ்தமனத்துக்கு முன்பாக இறக்கி விட வேண்டும். இதுதான் சட்ட நடைமுறை. ஆனால், தற்போது அதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி வீடுகளில் பொதுமக்கள் தேசியக்கொடியை பகலில் மட்டுமல்லாது இரவிலும் பறக்க விடலாம் என்றும் இதற்காக இந்திய தேசியக்கொடி சட்டம் […]
தேசியக் கொடியை வடிவமைத்தவர் பற்றி உங்களுக்கு தெரியுமா..? யார் இந்த பிங்காலி வெங்கையா..?

You May Like