சிறிய உடற்பயிற்சியுடன், ஆரோக்கியமான சில உணவு வகைகளை உணவில் சேர்த்துவந்தால் உடல் எடையை குறைக்கலாம்.
அதிக புரத சத்தை கொண்டுள்ள முட்டை, காலை உணவுக்கு ஏற்றது,இது எடை இழக்க உதவுகிறது.மேலும், பருப்புகள், பீன்ஸ், தயிர், கிரீன் டீ உடல் எடை இழக்க உதவுகிறது. உடல் எடையை குறைக்க நார்ச்சத்து உள்ள உணவுகள் சாப்பிட வேண்டியது அவசியம். நார்சத்து உள்ள உணவுகள் பசியை குறைத்து விடுவதால் உணவின் தேவையும் குறைகிறது இதனால் நீங்கள் குறைவான அளவு உணவை சாப்பிடுவதால் கலோரிகள் குறைந்து உடல் எடை குறையும் மேலும் நார்சத்துகள் உடலில் கொழுப்பு அதிகம் சேராமல் காக்கும்.
உங்களின் உணவு தட்டில் சாதம் மட்டும் வைத்து கொண்டு காய்கறிகளை அதிகம் சேர்த்து கொள்ளுங்கள். தினமும் உங்கள் மதிய உணவில் ஏதாவது ஒரு கீரை இருக்குமாறு பார்த்து கொள்ளுங்கள். ஆப்பிள், ஆரஞ்சு மற்றும் அத்திபழம் போன்ற பழங்கள் சாப்பிடுங்கள் இதில் அதிக அளவு நார்சத்து உள்ளது. இவை உங்கள் எடையை குறைக்க உதவும். மீன்களில் ஒமேகா 3 உள்ளது. இதனால் உங்கள் உணவில் மீன் சேர்த்து கொள்ளலாம்.
அரிசி சாதத்திற்கு பதிலாக கேழ்வரகு கம்பு சாமை சோளம் போன்ற சிறுதானியங்கள் கொண்டு செய்யபடும் உணவுகளை உங்கள் உணவில் சேர்த்து கொள்ளுங்கள்.தினமும் நிறைய தண்ணீர் குடிப்பது நல்லது தண்ணீர் குடிப்பதால் உடலில் உள்ள நச்சு கழுவுகள் வெளியேறும். காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது உடல் எடையை குறைக்க உதவும்