வீடு தொடங்கி பள்ளி, கல்லூரி, ஆபீஸ், பொது இடங்கள் என அனைத்தும் இடங்களில் பெண்கள் பாதுகாப்பு என்பது மிக மிக அவசியமான ஒன்றாக மாறி விட்டது. பஸ் நிலையம், ரயில் நிலையம் போன்ற மக்கள் கூடும் பொது இடங்களில் கூட பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவது தனியாக பயணம் மேற்கொள்ளும் பெண்கள் மத்தியில் பெரும் பயத்தை ஏற்படுத்துகிறது.
பயணங்களின் போது பெண்களுக்கு எதிராக அரங்கேறும் பாலியல் சீண்டல்கள் எங்கேயோ ஒரு பக்கம் தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கிறது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. நிம்மதியாக பஸ்ஸில் கூட பயணம் செய்ய முடியாத சூழ்நிலையில் நாடு உள்ளது . இது போன்ற சூழ்நிலைகளை கையாள, தனியாக பயணம் மேற்கொள்ளும் பெண்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான பாதுகாப்பு விஷயங்கள் குறித்து இங்கு பார்ப்போம்.
1. பயணத்தின் போது உங்களுக்கு ஏதேனும் பிரச்சனை அல்லது அவசர உதவி தேவைப்பட்டால் உடனே தமிழக காவல்துறையின் ‘காவல் உதவி’ என்ற ஆப்பில் உள்ள SOS எனும் அவசரகால பட்டனை அழுத்துங்கள். இதன் மூலம் உங்களுக்கு உதவி தேவை என்பது காவல் துறையினருக்கு தெரிய வரும்.
2. ரயிலில் தனியாக பயணம் மேற்கொள்ளும் பெண்கள் ஏதேனும் பிரச்சனையை சந்தித்தால் உடனே தெற்கு ரயில்வேயின் இலவச அழைப்பு எண்ணான 182 க்கு அழைத்து உதவி கோரலாம்.
3. பயணங்களின் போது பிரச்சனை என்றால் எந்தவித தயக்கமும் இன்றி காவல்துறையின் புகாரளிக்கும் கட்டுப்பாட்டு அறை எண்ணான 100க்கு அழைத்து விவரத்தை கூறி உதவி கேட்கலாம்.
4. உங்கள் ஃபோனில் இருந்து பெண்கள் பாதுகாப்பு உதவி எண்ணான 181 க்கு அழைத்து பிரச்சனையை கூறி உதவி கேட்கலாம்.
5. ‘காவல் உதவி’ ஆப் இருந்தால் அதில் கேமரா வழியாக சம்பவ இடத்தை வீடியோ எடுத்து அப்லோட் செய்தும் உதவி கோரலாம்.
Read more ; பரபரப்பு.. ஏர் இந்தியா, இண்டிகோ உட்பட 85 விமானங்களுக்கு இன்று வெடிகுண்டு மிரட்டல்..!!