fbpx

பருவக்கால பழமான ஆரஞ்சு பழத்தின் ஆரோக்கிய நன்மைகள் இதோ!… சரும பிரச்சனைக்கும் தீர்வு!…

சிட்ரஸ் பழமான ஆரஞ்சில், உடலின் முக்கிய பாதுகாப்பு அமைப்பான நோய் எதிர்ப்பு மண்டலத்தைப் பாதுகாக்கும் திறன் உள்ளது. இதன் நன்மைகளைப் பற்றி இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளலாம்.

கோடை சீசன் என்றாலும் அதன் தாக்கத்தை எதிர்க்கொள்ளும் வகையில் உணவு மற்றும் பழ வகைகளும் உள்ளன. அதிலும் சிட்ரஸ் நிறைந்த பழங்களை சாப்பிட்டால் உடலுக்கு நல்லது. ஆரஞ்சு பழத்தில் அதிகளவில் வைட்டமின் சி அடங்கியுள்ளது. கெட்ட கொழுப்பை கரைக்கும் பெக்டின் என்ற நார்ச்சத்து, பொட்டாசியம் ஆகியவையும் இதில் உள்ளது. இந்தப் பொட்டாசியம் இதயத்தின் சுவர்கள் தடிப்பதை தவிர்க்கிறது. எனவே ஆரஞ்சுப் பழத்தை அடிக்கடி எடுத்துக்கொண்டால் இதயத்திற்கு மிகவும் நல்லது. தோல் மற்றும் கண் ஆரோக்கியம் மேம்படும்: வெய்யில் காலத்தில் உண்டாகும் அக்கி, தோல் வியாதிகள், மஞ்சள் காமாலை, டைபாயிடு போன்றவைகளில் இருந்து உடனடி நிவாரணம் தருகிறது. மேலும்ஆரஞ்சு கண் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

பூஜ்ஜிய கலோரி கொண்ட பழங்களில் ஒன்றான ஆரஞ்சு பழம் தேவையற்ற கலோரிகளை எரிக்கும் சக்தியை கொண்டுள்ளது. எனவே, உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இருப்பவர்கள் உங்களது அன்றாட உணவில் ஆரஞ்சை பழமாகவோ அல்லது ஜுஸாகவோ சாப்பிடலாம். சளி, ஆஸ்துமா, நுரையீரல் கோளாறு, சுவாசக் கோளாறு, காச நோய் போன்ற நோய்களுக்கு ஆரஞ்சு பழச்சாறு சாப்பிட்டு வந்தால் விரைந்து குணம் பெறலாம். செரிக்கும் சக்தியும், பசியையும், அதிகப்படுத்துவதுடன் புண் ஆன குடலை விரைந்து சரி செய்கிறது. அழிந்த திசுக்களைப் புதுப்பிக்கிறது. இரத்த சோகை, நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களின் உன்னத உணவாக செயல்பட்டு புது இரத்தம் உற்பத்தி செய்ய ஆரஞ்சு பழம் பெரிதும் உதவுகிறது.

கர்ப்பிணிகள் இப்பழச் சாற்றை அதிக அளவில் சாப்பிட்டால் போதுமான நோய் எதிர்ப்பு சக்தியைப் பெறுவார்கள். அதுமட்டுமல்லாமல் கருவில் உள்ள குழந்தையின் தோல் மற்றும் கண் பார்வை ஆரோக்கியமாக இருக்கும். உடல் சூடு, வெட்டைச்சூடு, மூல வியாதி போன்றவற்றிற்கும், சிறு நீர் எரிச்சல், சிறுநீர்க் கோளாறுகளுக்கும் இரவில் அரை டம்ளர் ஆரஞ்சு சாறு குடித்தால் அற்புத பலன் கிடைக்கும்.

Kokila

Next Post

ஒல்லியான உடல் தோற்றமா!... உடல் எடையை அதிகரிக்க!... கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள்!

Fri Mar 17 , 2023
ஒல்லியான உடல் தோற்றம் உடையவர்கள் தினசரி உணவில் சில உணவுப் பொருட்களைச் சேர்ப்பதன் மூலம், ஆரோக்கியமான முறையில் எடையை அதிகரிக்கலாம். உடல் எடையை அதிகரிக்க, அதிக கலோரிகளை தொடர்ந்து சாப்பிடுவது மிக முக்கியம். எடை அதிகரிப்பது அல்லது உங்கள் உடலில் தசை அடர்த்தியை அதிகரிப்பது ஒன்றும் உடல் எடையை குறைப்பது போல எளிதான காரியம் அல்ல. இருப்பினும், உங்கள் தினசரி உணவில் சில உணவுப் பொருட்களைச் சேர்ப்பதன் மூலம், ஆரோக்கியமான […]

You May Like