fbpx

இந்த வார ஓடிடியில் வெளியான திரைப்படங்களின் லிஸ்ட் இதோ..!! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!!

என்னதான் வாரந்தோறும் திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளிவந்தாலும், ஓடிடி தளங்களில் வெளியாகும் படங்களை பார்ப்பதற்கு என்றே தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. அந்த வகையில், இந்த வாரம் எந்தெந்த திரைப்படங்கள் எந்தெந்த ஓடிடி தளங்களில் வெளியாகவுள்ளன என்பதை பார்க்கலாம்.

காமெடி நடிகர் சதீஷ் நடிப்பில் வெளியான கான்ஜூரிங் கண்ணப்பன் திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஜனவரி 5ஆம் தேதியான இன்று வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் மம்மூட்டி, நடிகை ஜோதிகா ஆகியோரை மையக் கதாபாத்திரமாக வைத்து எடுக்கப்பட்ட ‘காதல் தி கோர்’ திரைப்படம் அமேசான் பிரைமில் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு மொழிகளில் வெளியாகியுள்ளது.

‘ஹாய் நான்னா’ திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடனம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது.

சர்வேஷ் மேவாரா இயக்கத்தில் கங்கனா ரனாவத் பிரதான கதாப்பாத்திரத்தில் நடித்த தேஜஸ் திரைப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் ஜனவரி 5ஆம் தேதியான இன்று வெளியாகிறது.

இயக்குநர் தேஜா மார்னி இயக்கத்தில் ஸ்ரீகாந்த், ராகுல் விஜய், வரலட்சுமி சரத்குமார், ஷிவானி ராஜசேகர் உள்ளிட்டோர் நடித்த கோடபொம்மாலி பிஎஸ் திரைப்படம் ஆஹா ஓடிடி தளத்தில் ஜனவரி 5ஆம் தேதியான இன்று வெளியாகிறது.

Chella

Next Post

மக்களே...! 2024 பொங்கல் பரிசு தொகுப்பு...! முதல்வர் படத்துடன் கூடிய டோக்கன் ரெடி...!

Fri Jan 5 , 2024
பொங்கல் பரிசுக்கான டோக்கன் தயார் நிலையில் உள்ளது. கடந்த 2023 அக்டோபர் 31-ம் தேதி நிலவரப்படி தமிழகத்தில் உள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர் என 2 கோடியே 19 லட்சத்து 57,402 பேருக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை மற்றும் முழு கரும்புடன் கூடிய தொகுப்பு வழங்க ரூ.238 கோடியே 92 லட்சத்து 72,741 நிதி ஒதுக்கி நிர்வாக […]

You May Like