fbpx

”டேய் நான் சொல்ற மாதிரி பண்ணுடா”..!! சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை..!! யூடியூபர் திவ்யா உள்பட 4 பேருக்கு ஜெயில் தண்டனை..!!

ரீல்ஸ் எடுப்பதாக கூறி சிறுவர்களை அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்து வீடியோ எடுத்ததாக யூடியூப் பிரபலங்கள் 4 பேரை போக்சோ வழக்கில் போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர் கார்த்திக் (30). தஞ்சையை சேர்ந்தவர் டிக்டாக் பிரபலம் திவ்யா (36). இவருடன் ரீல்ஸ் வீடியோ போடுவதற்காக ஶ்ரீவில்லிபுத்தூர் அருகே அத்திகுளத்தில் உள்ள தனது அக்கா வீட்டிற்கு நவம்பர் மாதம் வந்துள்ளார். அங்கு திவ்யா, இரண்டு சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கார்த்திக், கடந்த வாரம் விருதுநகர் எஸ்.பி அலுவலகத்தில் புகாரளித்தார். இதற்கிடையே, சில தினங்களுக்கு முன் கடலூரை சேர்ந்த யூடியூப் பிரபலம் சித்ரா (48) சென்னை டிஜிபி அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். அதில், யூடியூபர் திவ்யா, குழந்தைகளை அடைத்து வைத்து பாலியல் தொல்லை கொடுப்பதாக புகாரளித்திருந்தார். இதுதொடர்பாக ஶ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார், விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிடப்பட்டது.

இதையடுத்து, நடத்தப்பட்ட விசாரணையில், 15 மற்றும் 17 வயது சிறுவர்களுக்கு யூடியூபர் திவ்யா, தொடர்ந்து பாலியல் தொல்லை அளித்து வந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து திவ்யா, கார்த்திக், சித்ரா, ஆனந்தராமன் ஆகிய 4 பேர் மீது போக்சோ வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னர், 4 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் கூறுகையில், ”ஈரோட்டை சேர்ந்த கீழக்கரை என்ற கார்த்திக், திவ்யாவுடன் சேர்ந்து வீடியோ எடுப்பதற்காக ஶ்ரீவில்லிபுத்தூருக்கு வந்துள்ளார். அங்கு, அதே பகுதியை சேர்ந்த 15 மற்றும் 17 வயது சிறுவர்களை ரீல்ஸ் எடுக்கிறோம் என்ற பெயரில் தனியாக அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். சித்ரா கூறியதன் பேரில் கார்த்திக்கின் உறவினரான ஆனந்தராமன் (24) என்பவர், திவ்யா சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை அளித்ததை வீடியோ எடுத்து அனுப்பியுள்ளா.

அந்த வீடியோவை வைத்து சித்ரா, கார்த்திக் மற்றும் திவ்யாவை மிரட்டியது தெரியவந்தது. இதையடுத்து, சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை அளித்த திவ்யா, உடந்தையாக இருந்த கார்த்திக், வீடியோ எடுக்கக் கூறிய சித்ரா, வீடியோ எடுத்த ஆனந்தராமன் ஆகிய 4 பேரை போக்சோ சட்டத்தில் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளோம்” என்றனர்.

Read More : ”நடிக்க வாய்ப்பு வேணும்னா என்கூட அப்படி இருக்கணும்”..!! அட்ஜஸ்ட்மெண்ட் கேட்ட தயாரிப்பாளருக்கு பிரபல நடிகை கொடுத்த பதிலடி..!!

English Summary

Police have arrested four YouTube celebrities in a POCSO case for allegedly taking children and sexually abusing them and making videos of them under the pretext of filming reels.

Chella

Next Post

Video | நடுவானில் பயங்கரம்.. ஹெலிகாப்டரும் விமானமும் நேருக்கு நேர் மோதி விபத்து.. 60 பேரின் நிலை என்ன..?

Thu Jan 30 , 2025
American Airlines Plane Collides With Helicopter Near Washington's Reagan Airport

You May Like