பிரேசிலில் இளைஞர் ஒருவர் தனது 6 மனைவிகளுடன் ஒரே கட்டிலில் படுப்பதற்காக பிரமாண்ட பெட்ரூம் அமைத்து அதில் 81 லட்சம் செலவில் படுக்கை வசதி செய்திருக்கிறார்.
பிரேசில் நாட்டை சேர்ந்தவர் ஆர்தர் ஓ உர்சோ(37). இவர் 6 பெண்களை திருமணம் செய்திருக்கிறார். லுவானா கசாகி(27), எமிலி சோசா(21), வால்கேரியா சாண்டோஸ் (24), டாமியானா(23), அமண்டா அல்புகெர்கி(28) ஆகியோரை திருமணம் செய்த ஆர்தர், கடைசியாக 51 வயதான ஒலிண்டா மரியா என்பதை திருமணம் செய்துள்ளார்.கடந்த 2021ம் ஆண்டில் லுவானா கசாகி என்பவை முதல் திருமணம் செய்திருக்கிறார் ஆர்தர். இவருக்கு மொத்தம் 9 மனைவிகள். கடந்த ஆண்டில் 3 பேரை விவாகரத்து செய்துள்ளார்.
6 மனைவிகளில் ஒவ்வொருவரும் ஒரு குழந்தையை பெற்றெடுக்க வேண்டும் என்றும் இதில் முதலில் யார் கர்ப்பம் அடைவது என்றும் ஒரு போட்டி இருப்பதாக அண்மையில் செய்திகள் வெளியாகின. தனது 6 மனைவிகளுடன் ஒன்றாக சேர்ந்து தூங்க முடியவில்லை. கட்டில் 3 பேர் சேர்ந்து தூங்கும் வசதிதான் உள்ளது என்பதால் ஒரே நேரத்தில் 6 மனைகளுடன் சேர்ந்து தூங்கும் வசதியாக படுக்கை வசதி செய்திருக்கிறார். இதற்காக 81 லட்சம் ரூபாய் செலவிட்டிருக்கிறார். 20 அடி நீள பிரம்மாண்ட படுக்கை வசதியை 12 தொழிலாளர்கள் சேர்ந்து 15 மாதங்கள் உழைத்து தயாரித்திருக்கிறார்கள்.
இப்போதுதான் நிம்மதியாக இருக்கிறது என்று அந்த பிரம்மாண்ட படுக்கையை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ஆர்தர். உலகின் மிகப்பெரிய படுக்கையான இது கின்னஸ் சாதனை பெறும் என்று நம்பிக்கை இருப்பதாகவும் ஆர்தர் தெரிவித்திருக்கிறார்