fbpx

பிச்சைக்காரன் 2 படத்தை வெளியிட தடை கோரிய வழக்கு.. விஜய் ஆண்டனி பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு..

பிச்சைக்காரன் 2 படத்தை வெளியிட தடை கோரிய வழக்கில், விஜய் ஆண்டனி பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது..

விஜய் ஆண்டனி நடித்துள்ள பிச்சைக்காரன் 2 படம் ஏப்ரல் 14ம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.. இந்த சூழலில், பிச்சைக்காரன் படத்துக்கு தடை விதிக்கக்கோரி, மாங்காடு மூவீஸ் நிறுவன உரிமையாளர் ராஜ கணபதி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். தனது மனுவில் “ எனது மாங்காடு மூவீஸ் தயாரித்து, 2016-ம் ஆண்டு வெளியிட்ட ஆய்வுக்கூடம் படத்தின் கரு, மூளை மாற்று அறுவை சிகிச்சை தொடர்புடையது..

அந்த கருவை, எந்த அனுமதியும் பெறாமல் விஜய் ஆண்டனி பயன்படுத்தியுள்ளார்.. எனது ஆய்வுக்கூடம் படத்தின் திரைக்கதை, வசனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதால் பிச்சைக்காரன் -2 படத்தை வெளியிடக்கூடாது என தடை விதிக்க வேண்டும், 10 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடாக வழங்க உத்தரவிட வேண்டும்..” என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.சவுந்தர் முன்பு விசாரணைக்கு வந்தது.. அப்போது நீதிபதி, விஜய் ஆண்டனி இந்த மனுவுக்கு ஏப்ரல் 12ம் தேதிக்குள் பதிலளிக்கும் உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார்..

Maha

Next Post

தம்பியுடன் சண்டையில் மாணவி செய்த செயல்! மருத்துவர்கள் மூன்று மணி நேரம் போராட்டத்தில் நடந்தது என்ன?

Fri Apr 7 , 2023
தம்பியுடனான சண்டையின்போது வாயில் செல்போனை வைத்திருந்த மாணவி அதை அப்படியே விழுங்கிய சம்பவம் பரபரப்பை அதிர்ச்சியும் ஏற்படுத்தி இருக்கிறது. நீண்ட நேர அறுவை சிகிச்சைக்கு பிறகு அந்தப் பெண்ணின் வயிற்றிலிருந்து செல்போனை அகற்றி உள்ளனர். மத்திய பிரதேசம் மாநிலம் பிந்து பகுதியில் தான் இச்சம்பவம் நடைபெற்று இருக்கிறது. அங்குள்ள ஒரு குடும்பத்தைச் சார்ந்த 17 வயது சிறுமியும் அவரது தம்பியும் செல்போன் பாவிப்பது தொடர்பான சச்சரவையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தம்பியிடம் […]

You May Like