ஹீல்ஸ் அணிவது ஃபேஷன் என்று நினைத்து தினமும் ஆடைக்கேற்றபடி அணிந்தால் அதனால் உண்டாகும் பக்கவிளைவுகள் பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டும். ஸ்டைல்.. ஃபேஷன் என்று நினைக்கும் இவை என்ன மாதிரியான கால் பாதிப்புகளை உண்டு செய்கிறது என்பதை பார்க்கலாமா?
ஹை ஹீல்ஸ் அணிவது உங்கள் கால்கள் மற்றும் நகங்களில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இது பாதங்கள் மற்றும் குதிகால்களில் உள்ள தோல் கடினமாகிவிடும். நகங்களைச் சுற்றி கொப்புளங்கள் உருவாகலாம். ஹை ஹீல்ஸ் அணிவதால் உங்கள் உடல் எடை முழுவதும் உங்கள் பாதத்தின் முன்பக்கத்தில் ஏற்றப்படும். இது முழங்கால் வலி, குதிகால் வலி மற்றும் முதுகு வலிக்கு கூட வழிவகுக்கும்.
ஹை ஹீல்ஸ் அணிவதால் உடல் சமநிலையை பராமரிக்க அதிக சக்தியை செலவிட வேண்டியிருக்கும். இது முதுகெலும்பு மற்றும் உடல் சமநிலையில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்துகிறது. தொடர்ந்து ஹை ஹீல்ஸ் அணிவது மூட்டுகளில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இது கீல்வாதம் மற்றும் மூட்டுப் பிரச்சினைகளின் அபாயத்தை அதிகரிக்கிறது.
ஹை ஹீல்ஸ் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் விளைவுகளை ஏற்படுத்துகிறது. ஏனெனில் ஹை ஹீல்ஸ் அணிவது நடை வேகத்தைக் குறைக்கும். இது உடலில் ஒரு விளைவை ஏற்படுத்துகிறது. மற்றவர்கள் தன்னை பார்த்துக் கொண்டிருக்கிறார்களா? உயரத்தை மறைக்க ஹீல்ஸ் அணிவதாக மற்றவர்கள் நினைக்கிறார்களா? என யோசித்துக்கொண்டே இருப்பார்கள். இது நீண்ட காலத்திற்கு மனநலப் பிரச்சினைகள் மற்றும் மன அழுத்தத்திற்கு வழிவகுக்கும்.