fbpx

அதிக வட்டி… மறைமுக கட்டணங்கள்..!! ஆன்லைன் கடன் செயலியில் இருக்கும் ஆபத்து..!! ரிசர்வ் வங்கி எச்சரிக்கை..!!

அதிக வட்டி முதல் மறைமுக கட்டணங்கள் வரை பல விஷயங்களை ஆன்லைன் கடன் செயலிகளில் கவனிக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் மூலம் கடன் பெறுவது என்பது மிக எளிதாக இருந்தாலும் அதனை பயன்படுத்தும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஆன்லைன் கடன் செயலிகள் மூலம் கடன் பெறுவதற்கு முன்பு முதலில் அந்த செயலி சட்டப்பூர்வமான செயலிதானா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். ரிசர்வ் வங்கி கட்டுப்பாடுகளின் படி, வங்கிகள் மற்றும் டிஜிட்டல் செயலிகளுடன் இணைந்து செயல்பட்டால் அது தொடர்பான விவரத்தை தெரிவிக்க வேண்டும். பொதுவாக வங்கி கடன் எளிதாக பெற முடியாதவர்கள் டிஜிட்டல் கடன் பெறுவதற்கு முயற்சி செய்கின்றனர்.

இதனை பயன்படுத்தி மோசடி செயலிகள் அதிவேகமாக கடன் வழங்குவதாக கூறி அதன் பிறகு அதிகமான வட்டி வசூலிக்கின்றனர். இதனால், நீங்கள் மோசடியில் சிக்கி உங்கள் பணத்தை இழக்க நேரிடும். இந்த செயலிகளின் நிபந்தனைகள் மற்றும் விதிகளையும் கூர்ந்து கவனிக்க வேண்டும் எனவும் கடனை திரும்ப செலுத்தும் காலம் உள்ளிட்ட அம்சங்களை கவனிக்க வேண்டும் எனவும் முடிந்த அளவிற்கு இது போன்ற செயலிகளில் கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டும் என ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது.

Chella

Next Post

வீட்டில் நிறுத்தப்பட்ட கார் திடீரென்று வெடித்த மர்மம்…..! உரிமையாளர் பரிதாப பலி காரணம் என்ன……?

Mon Aug 7 , 2023
கேரள மாநிலத்தில், வெளியே சென்று விட்டு,அதன் பின்பு வீட்டிற்கு வந்து, நிறுத்தப்பட்ட நிலையில், வெடித்து சிதறிய காரில், இருந்த உரிமையாளர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த கார் வெடித்ததற்கான காரணம் என்ன? என்பது இதுவரையில் தெரியவில்லை. கேரள மாநிலம், ஆலப்புழா மாவேலிக்கரையில் சென்ற ஞாயிற்றுக்கிழமை, அதாவது, நேற்று இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இதில், பயணித்த கிருஷ்ண பிரகாஷ்(35) என்பவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மாவேலிகரையில் காரஜ்மா பகுதியை சேர்ந்த இவர், […]

You May Like