தமிழ்நாடு சட்டப்பேரவை 5 நாட்கள் இடைவெளிக்கு பிறகு இன்று மீண்டும் கூடியது. இந்நிலையில், மாநில சுயாட்சி தொடர்பாக முதலமைச்சர் முக.ஸ்டாலின் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், “மாநிலங்களின் நியாயமான உரிமைகளை பாதுகாக்க உயர்நிலைக் குழு அமைக்கப்படுகிறது. ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி சூரியன் ஜோசப் தலைமையில் உயர்நிலைக் குழு அமைக்கப்படுவதாக முதலமைச்சர் முக. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இந்த குழு மாநில உரிமைகளை மீட்டெடுப்பது குறித்த பரிந்துரைகளை வழங்கும். இந்த குழுவில் அசோக் வர்தன், நாகநாதன் உள்ளிட்டோர் உயர்நிலைக் குழுவின் உறுப்பினர்களாக இருப்பார்கள். உயர்நிலைக் குழுவின் இடைக்கால அறிக்கை 2026ஆம் ஆண்டில் தாக்கல் செய்யப்படும் என்றும் குழுவின் இறுதி அறிக்கை அடுத்த 2 ஆண்டுகளிலும் சமர்ப்பிக்க வேண்டுமென முதலமைச்சர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும், மாநில சுயாட்சியின் முதல் குரல் தமிழ்நாட்டில் இருந்துதான் ஒலிக்கத் தொடங்கும் என்றும் தெரிவித்துள்ளார்.