குடும்ப நல நீதிமன்றங்களில் வழக்குகளில் தீர்ப்புக்கு பின்னர் குழந்தைகள் யாருடன் இருப்பது என்பது தொடர்பான வழக்குகளை உயர்நீதிமன்றம் விசாரிக்கலாம் , அதற்கு உயர்நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
குடும்ப நல நீதிமன்றங்களில் உள்ள வசதியைப் போல உயர் நீதிமன்றத்தில் குடும்ப நல வழக்குகளை விசாரிக்க போதுமான வசதிகள் இல்லை என கூறப்பட்டது. இதையடுத்து உயர்நீதிமன்றம் இந்த வழக்குகளை குடும்ப நல நீதிமன்றமே விசாரித்துக்கொள்ள அனுமதி அளிக்க கோரி வழக்கு தொடரப்பட்டது. இதை 5 நீதிபதி அமர்வு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரித்தனர். 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணை நடத்த அதிகாரம் உள்ளதாக அவர்கள் தீர்ப்பளித்தனர். எனவே ஏற்கனவே உள்ள அதிகாரம் தொடரும் எனவும் பிரிந்த தம்பதியரின் குழந்தைகளை ஒப்படைக்க கோரிய வழக்குகளை இனி உயர்நீதிமன்றம் தொடரலாம் எனவும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.