fbpx

ஐபிஎல் வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய வீரர்!… பிராவோவின் சாதனையை சமன் செய்த சாஹல்!…

ஐதராபாத் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 4 விக்கெட்கள் எடுத்ததன் மூலம் ராஜஸ்தான் வீரர் சாஹல் ஐபிஎல் வரலாற்றில் அதிக விக்கெட்களை வீழ்த்திய சிஎஸ்கே வீரரின் சாதனையை சமன் செய்துள்ளார்.

ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் மே 7-ம் தேதி இரவு 7.30 மணிக்கு ஜெய்ப்பூரில் நடைபெற்ற 52-வது லீக் போட்டியில் ராஜஸ்தானை 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த ஐதராபாத் தங்களுடைய 4-வது வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் 9-வது இடத்திற்கு முன்னேறியது. அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் 20 ஓவர்களில் அதிரடியாக செயல்பட்டு 214/2 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 35 (18) ஜோஸ் பட்லர் 95 (59) கேப்டன் சஞ்சு சாம்சன் 66* (38) என களமிறங்கிய அனைத்து பேட்ஸ்மேன்களும் அதிரடியாக பெரிய ரன்களை எடுத்தனர்.

அதை தொடர்ந்து ஐதராபாத் அணி கடைசி பந்தில் சிக்ஸ் அடித்து வெற்றி பெற்றது. ராஜஸ்தான் அணி தோல்வியை தழுவியிருந்தாலும் அந்த அணியின் சுழற்பந்து வீச்சாளர் சாஹல் 4 விக்கெட்களை எடுத்து புதிய சாதனையை படைத்துள்ளார். 4 விக்கெட்களை ஆட்டநாயகன் விருது வெல்லும் அளவுக்கு அபாரமாக செயல்பட்ட சாஹல் ஐபிஎல் வரலாற்றில் அதிக விக்கெட் எடுத்த பந்து வீச்சாளர் என்ற பிராவோவின் சாதனையை சமன் செய்து அசத்தியுள்ளார். சொல்லப்போனால் அவரை விட மிகவும் குறைந்த போட்டிகளில் 183 விக்கெட்களை எடுத்து அதை சமன் செய்துள்ள சாஹல் ஐபிஎல் வரலாற்றில் அதிக விக்கெட்களை எடுத்த இந்திய வீரர் என்ற புதிய சாதனையும் படைத்துள்ளார்.

ஐபிஎல் வரலாற்றில் அதிக விக்கெட்கள் எடுத்த வீரர்களின் பட்டியல்: 1. சாஹல் : 183* (142 போட்டிகள்) 2. பிராவோ : 183 (161 போட்டிகள்) 3. பியூஸ் சாவ்லா : 174* (175 போட்டிகள்) 4. அமித் மிஸ்ரா : 172* (160 போட்டிகள்) 5. ரவிச்சந்திரன் அஸ்வின் : 171* (195 போட்டிகள்) ஆகும்.

Kokila

Next Post

ஆஹா!... இவ்வளவு கம்மி விலையா?... இனிமேல் இதில் தான் உணவு ஆர்டர் பண்ணனும்!... புதிய சேவை அறிமுகம்!

Tue May 9 , 2023
ஸ்விகி, சோமொட்டை விட பாதி விலையில் உணவு வழங்கும் ஓ.என்.டி.சி (ONDC) தொழில்நுட்பம் இந்தியாவின் முக்கிய நகரங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் ஆன்லைன் உணவு டெலிவரி சேவைகளானது தற்போது மிகவும் அதிகமாகி கொண்டு வருகிறது. இந்த உணவு டெலிவரி வணிக போட்டியில் சோமட்டோ (Zomato) மற்றும் ஸ்விகி (Swiggy) இரண்டும் முன்னணி வரிசையில் இயங்கி கொண்டு இருக்கின்றன. இந்த ஆப்கள் மூலம் உணவகத்தில் இருந்து பயனாளர்கள் வீட்டிற்கு குறுகிய நேரத்தில் உணவை […]

You May Like