இஸ்லாமிய நாடுகளில் ஹிஜாப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். கல்லூரிகளில் ஹிஜாப் அணிவது அத்தியாவசிய நடைமுறை அல்ல என்று உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு வழக்கு ஒன்றில் வாதம் நடத்தியுள்ளது.
ஹிஜாப்புக்கு தடை விதித்தது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது. இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர் ஆஜராகி தனது வாதங்களை முன் வைத்தார்.
உச்சநீதிமன்றத்தில் அரசு தரப்பு வழக்கறிஞர் , துஷர் மேத்தா கூறிய வாதத்தில் , ’’இயற்கையிலேயே இஸ்லாமிய முறைப்படி கலாச்சாரத்தை அரசியலமைப்பு ரீதியாக பின்பற்றி வரும் நாடுகள் உள்ளன, அந்த நாடுகளில் உள்ள பெண்களே ஹிஜாப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
எந்த நாடு அவ்வாறு பின்பற்றுகின்றது என நீதிமன்றம் கேள்வி எழுப்பியதற்கு, இரண்டு நாட்களாக ஈரானில் நடைபெற்று வரும் போராட்டத்தை சுட்டிக் காட்டி ஈரான் நாடுதான் போராட்டம் நடத்தி வருகின்றது என்றார். எனவே இது ’’அத்தியாவசிய நடைமுறையில் கிடையாது. குரானில் கூட அத்தியாவசியம் என குறிப்பிடப்படவில்லை, அரசியலமைப்பால் ஏற்றுக்கொள்ப்பட்ட அல்லது அனுமதிக்கப்பட்ட ஒன்று பின்பற்றத்தக்க ஒன்று அவ்வளவுதான்’’ என்றார்.

மேலும் ஐரோப்பிய நீதிமன்றங்களில் இது போன்ற வழக்குகளில் குறிப்பிடப்பட்டுள்ளவற்றை சுட்டிக் காட்டினார். மேலும் மாநிலத்தில் அரசு உத்தரவை குறிப்பிட்டு கல்லூரி மற்றும் கல்வி நிறுவனங்களில் ’’ மதம் அனைவருக்கும் சமம் ’’ என்றார்.
இந்த உத்தரவு நேரடியாக மாணவர்களுக்கு கிடையாது, கல்வி நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அரசு , இதைய அணியக் கூடாது என வலியுறுத்தவில்லை. அரசு உத்தரவு முழுமையாக பாலின பாகுபாடு பார்க்காமல் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட விதமான ஆடையை குறிப்பிட்ட நபர்கள் அணிவதற்கு தவிர்க்கப்பட்டது கிடையாது. அனைத்து மாணவர்களும் ஒரேமாதிரியான ஆடையை (சீருடை ) அணிய வேண்டும் என வலியுறுத்தப்படுகின்றது. ’’ என்றார்.
’’ 2004ம் ஆண்டு முதல் யாரும் ஹிஜாப் அணியவில்லை. திடீரென 2021ல் ஹிஜாப் அணிந்துவருது நடைமுறையாக்கப்பட்டது. 2022ல் குறிப்பிட்ட ஒரு இயக்கம் ஹிஜாப் அணிய வேண்டும் என கூறியது. சில மாணவர்கள் எடுத்த தன்னிச்சையான செயல் கிடையாது. அந்த மாணவர்கள் இந்த விவகாரத்தில் ஒரு மிகப்பெரிய சதி வேலையின் பங்கு. அவர்கள் என்ன கூறுகின்றார்களோ அதை அப்படியே மாணவர்கள் பின்பற்றுகின்றனர்.
பிரெஞ்சு நாட்டில் இதே போல பொது இடங்களில் புர்கா அணிவது பற்றிய வழக்கு வந்தது. அதை ஒப்பிடும் போது பிரான்சில் பொது இடங்களில் மத பாகுபாடு கிடையாது. நம் நாட்டில் வேறுமாதிரி . நமது மதசார்பின்னை கடுமயான ஒன்று ’’ எனவும் அவர் குறிப்பிட்டார்.
கர்நாடக மாநிலத்தில் கல்வி நிறுவனங்களில் இஸ்லாமியர்கள் சிலர் ஹிஜாப் அணிந்து வந்தனர். பதிலுக்கு இந்து மாணவர்கள் காவி துண்டு அணிந்து வந்தனர். இது மிகப்பெரிய சர்ச்சையானது. இந்நிலையில் கல்லூரி நிர்வாகம் ஹிஜாப் அணிய தடை விதித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய மாணவர்கள் பர்தா அணிந்து போராட்டம் நடத்தினர். மேலும் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அந்த தீர்ப்பில் கல்வி நிறுவனங்கள் ஹிஜாப்புக்கு தடை விதித்தது செல்லும் என தீர்ப்பளித்தது. இதை எதிர்த்துதான் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு வழக்கு நடைபெற்று வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.