மாநில கல்விக் கொள்கைக்கான கருத்துக் கேட்பு கூட்டத்தில், இந்தி என்பது தேசிய மொழி அல்ல என மாநில கல்வி கொள்கை வகுக்கும் குழுவின் தலைவரும், முன்னாள் நீதிபதியுமான முருகேசன் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழக அரசின் சார்பில், மாநிலக் கல்வி கொள்கை வகுப்பதற்கு, டெல்லி உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி முருகேசன் தலைமையில், உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு மாநிலக் கல்விக் கொள்கை தொடர்பான கருத்துக் கேட்புக் கூட்டத்தை இன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடத்தியது. இதில் மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் கலந்து கொண்டு தங்களது கருத்துகளை தெரிவித்தனர்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய குழு தலைவர் முருகேசன், ”போதை விழிப்புணர்வு பாடத்திட்டத்தை இடம்பெற செய்யவும், பாட சுமையை குறைக்கவும் மாணவர்கள் தரப்பில் விவாதிக்கப்பட்டது. மேலும் சிறப்பு குழந்தைகள், மாற்றுத் திறனாளிகளுக்கான
பாடத் திட்டம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. மேலும், இந்தி என்பது தேசிய மொழி அல்ல என்றும் அது மத்திய அரசின் அலுவல் மொழி என விளக்கமளித்தார்.