fbpx

JOBS: 8-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு.! சம்பளம் ரூ.62,000/- வரை.!

JOBS: எட்டாம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது

இந்து சமய அறநிலையத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு(Jobs) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி தூத்துக்குடி இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில் டிரைவர் மற்றும் அலுவலக உதவியாளர் பணிகளுக்கு காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த அறிவிப்பின்படி டிரைவர் பணிக்கு 1 காலிடமும் அலுவலக உதவியாளர் பணிக்கு 4 காலியிடங்களும் உள்ளன. இவற்றிற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது.

இந்த வேலைவாய்ப்பில் சேர்வதற்கு உச்சபட்ச வயது வரம்பு 32 ஆகும். டிரைவர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதோடு இலகுரக வாகன ஓட்டுனர் உரிமம் பெற்று இருக்க வேண்டும். அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். டிரைவர் பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு மாத ஊதியமாக ரூ.19,500/- முதல் ரூ.62,000/- வரை வழங்கப்படும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அலுவலக உதவியாளருக்கு ரூ.15,700/- முதல் ரூ.50,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என அந்த அறிவிப்பு தெரிவிக்கிறது.

இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உடைய நபர்கள் பூர்த்தி செய்யப்பட்ட தங்களது விண்ணப்பம் மற்றும் ஆவணங்களை உதவி ஆணையர், இந்து சமய அறநிலையத்துறை, அழகேசபுரம், தூத்துக்குடி-628001 இன்று முகவரிக்கு 20.03. 2024 தேதிக்குள் தபால் மூலமாக அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்க கட்டணங்கள் கிடையாது. விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வேலை வாய்ப்பினை பற்றிய பிற தகவல்களை அறிய https://hrce.tn.gov.in/hrcehome/index.php என்ற இணையதளத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம்.

English Summary: Hindu religious and charitable endowment offer jobs for 8th standard passed out candidates.

Read More:

Next Post

School: வந்தது உத்தரவு...! 5 வயது நிரம்பிய அனைத்து மாணவர்களையும் முதல் வகுப்பில் சேர்த்தல் வேண்டும்...!

Thu Feb 29 , 2024
ஐந்து வயது நிரம்பிய அனைத்து மாணவர்களையும் முதல் வகுப்பில் சேர்த்தல் வேண்டும். தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சீரிய முயற்சியால் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தும் பொருட்டு சிறப்பு முயற்சிகளாக இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும் மற்றும் நான் முதல்வன் திட்டங்களுடன் பிற முன்னெடுப்புகளான தற்காப்பு கலைப் பயிற்சி […]

You May Like