fbpx

’தமிழிசை என பெயர் வைத்ததற்காக அவரது தந்தையே வருத்தப்பட்டிருப்பார்’..!! அட்டாக் செய்த அமைச்சர் சேகர்பாபு..!!

தமிழிசை செளந்தரராஜனின் செயல்பாடுகளை பார்த்திருந்தால், அவரின் தந்தை குமரி ஆனந்தன் வருத்தமடைந்திருப்பார் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் தேசிய கல்விக் கொள்கை மற்றும் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக பாஜக சார்பில் கையெழுத்து இயக்கத்தை அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தொடங்கி வைத்தார். இதையடுத்து, நேற்று பாஜகவின் தமிழிசை செளந்தரராஜன், பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கும் முயற்சியில் ஈடுபட்டார். அப்போது அனுமதியின்றி கையெழுத்து போராட்டம் நடத்தியதாக கூறி தமிழிசையை போலீசார் கைது செய்தனர்.

இந்த கைது நடவடிக்கை குறித்து அமைச்சர் சேகர்பாபு கூறுகையில், ”தமிழிசை நடந்து கொண்ட நடவடிக்கையை அவர் தந்தை குமரி ஆனந்தன் பார்த்திருந்தால், வருத்தப்பட்டிருப்பார். இவருக்கா நாம் தமிழிசை என்று பெயர் வைத்தோம் என வேதனைப்பட்டிருப்பார். கையெழுத்து இயக்கம் என்று சொல்லிவிட்டு, வீடு வீடாக சென்று வாங்குவோம் என்கிறார்கள். ஆனால், பாஜகவினர் எந்த இடத்திற்கு சென்று வாங்கினார்கள் என்பதை பார்க்க வேண்டும்.

தமிழிசையை சுற்றி 10 பாஜகவினரை நிற்க வைத்துக் கொண்டு மீடியாவில் வெளிச்சம் பெற வேண்டும் என்பதால், தங்கள் கட்சியினரை வைத்து கையெழுத்து வாங்கிக் கொண்டார். அதேபோல், காலாவதி என்ற வார்த்தையை பயன்படுத்தி இருக்கிறார். புதுச்சேரியில் காலாவதியானவர், தென் சென்னை மக்களவை தேர்தலில் திமுகவால் காலி செய்யப்பட்டவர் எங்களை பார்த்து காலாவதி என்கிறார். எனவே, அவரை காலாவதியாக்கவும், அவர் சார்ந்த இயக்கத்தை காலாவதி ஆக்குவதற்கும் 2026 தேர்தலில் மக்கள் தயாராக இருக்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

Read More : 8, 10ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்..!! மாதம் ரூ.21,000 சம்பளத்தில் வேலை..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

English Summary

Minister Sekarbabu has said that if he had seen Tamilisai Soundararajan’s activities, her father Kumari Anandan would have been upset.

Chella

Next Post

சூடுபிடிக்கும் கொடநாடு வழக்கு..!! எடப்பாடி பழனிசாமியின் முன்னாள் பாதுகாப்பு அதிகாரிக்கு சிபிசிஐடி சம்மன்..!!

Fri Mar 7 , 2025
The CPCID police have summoned Veeraperumal, who was the chief security officer for former Chief Ministers Jayalalithaa and Edappadi Palaniswami.

You May Like