fbpx

வரலாறு படைத்த ஷாருக்கானின் பதான்.. கேஜிஎஃப் 2 படத்தின் முதல்நாள் வசூல் முறியடிப்பு..?

ஷாருக்கான், தீபிகா படுகோன் ஜான் ஆபிரகாம் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி உள்ள படம் பதான்.. இப்படத்தில் சல்மான் கான் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.. சித்தார்த் ஆனந்த் இயக்கி உள்ள இப்படத்தை ஆதித்யா சோப்ரா தயாரித்துள்ளார்.. சமீபத்தில் பதான் படத்தில் இடம்பெற்ற ‘பேஷாரம் ரங்’ பாடலை படக்குழு வெளியிட்டிருந்தது.. அதில் தீபிகா படுகோன் காவி நிற பிகினி உடையில் நடனமாடியது சர்ச்சையை ஏற்படுத்தியது.. வலதுசாரிகள் இப்படத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்..

இந்நிலையில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே பதாம் படம் நேற்று வெளியானது.. இப்படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்களே கிடைத்து வரும் நிலையில், இப்படம் பாக்ஸ்ஆபிஸில் வரலாறு படைத்துள்ளது. இப்படத்தின் முதல் நாள் வசூல் ரூ.54 கோடிக்கும் அதிகாமக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.. இதன் மூலம் யாஷ் நடித்த கேஜிஎஃப் 2 (இந்தி) படத்தின் சாதனையை இப்படம் முறியடிக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.. இந்தியில் டப் செய்யப்பட்டு வெளியான கேஜிஎஃப் முதல் நாளில் ரூ.53.95 கோடி வசூல் செய்தது.. ஆனால் பதான் படத்தின் இந்திய அளவிலான முதல்கட்ட வசூல் ரூ. 52.00 முதல் 54.00 கோடி வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..

நடிகரும் திரைப்படத் தயாரிப்பாளருமான சதீஷ் கௌஷிக் பதான் படம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.. அவரின் பதிவில் “அன்பான மும்பை திரைப்படத் துறைக்கு ஜனவரி 25, 2023 கொண்டாட்ட நாள். மீண்டும் நல்ல நாட்கள் வந்துவிட்டது. பிளாக்பஸ்டர் பதான் முதல் நாளில் 50 கோடியைத் தாண்டும்.. இது பாலிவுட்டின் பார்ட்டி டைம்.” என்று குறிப்பிட்டுள்ளார்..

தென்னிந்திய திரைப்படங்கள் தொடர்ந்து இந்திய அளவில் வெற்றி பெற்று வரும் அதே வேளையில் பாலிவுட் படங்கள் தொடர் தோல்விகளை சந்தித்து வருகின்றன.. கடந்த ஆண்டு வெளியான ஒரு சில படங்களை தவிர பல பாலிவுட் படங்கள் கடும் தோல்வியை சந்தித்தன.. இந்நிலையில் ஷாருக்கான் பாலிவுட்டின் வெற்றிக்கணக்கை மீண்டும் தொடங்கி வைத்துள்ளார் என்று சினிமா ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்..

Maha

Next Post

தேர்தலில் வெற்றிபெற ஒரு ஓட்டுக்கு ரூ.6,000..!! பாஜக முன்னாள் அமைச்சர் பரபரப்பு பேச்சு..!!

Thu Jan 26 , 2023
தேர்தலில் வெற்றிபெற வாக்காளர்களுக்கு ஒரு ஓட்டுக்கு தலா 6 ஆயிரம் ரூபாய் கொடுக்கச் சொன்ன முன்னாள் அமைச்சர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் வரும் மே மாதம் நடைபெற உள்ளது. இதனால், அங்கு தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த முறை ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்ற முனைப்புடன் காங்கிரஸ் கட்சியும், ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்று பாஜகவும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், […]

You May Like