தமிழ்நாடு அரசின் மருத்துவத் துறையில் 425 மருந்தாளுநர் பணியிடங்கள் காலியாகவுள்ளதாக மருத்துவ பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இதற்கான காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
காலிப்பணியிடங்கள் : 425
கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் இந்திய மருத்துவ கவுன்சிலிங் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் D.Pharm / B.Pharm / Pharm.D தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18ஆகவும், அதிகபட்சமாக 32ஆகவும் இருக்க வேண்டும்.
சம்பளம் :
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.35,400 முதல் ரூ.1,30,400 வரை மாத ஊதியம் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை:
Tamil Language Eligibility Test / Computer-Based Test (CBT) / Incentive Marks / Document Verification / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியானவர்கள் www.mrb.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று, அதை பூர்த்தி செய்து 10.03.2025ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
கூடுதல் விவரங்களுக்கு : https://mrb.tn.gov.in/pdf/2025/Pharmacist_Notification_2025.pdf