இந்தியாவில் தனது தொழிலை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ள ஃபாக்ஸ்கான் நிறுவனம், சீனாவில் இருந்து வெளியேறி கர்நாடகாவில் ரூ.6 ஆயிரம் கோடியில் முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது. தைவானை சேர்ந்த ஃபாக்ஸ்கான் நிறுவனம், இந்தியாவில் தமிழ்நாடு, ஆந்திரா ஆகிய 2 மாநிலங்களில் 3 மையங்களை கொண்டுள்ளது. இந்த ஆலையில் ஆப்பிள், ஜியோமி மற்றும் பிற எலக்ட்ரிக் நிறுவனங்களின் செல்போனுக்கான உதிரி பாகங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், கர்நாடகாவில் முதலீடு செய்வது குறித்து அம்மாநில அரசுடன் ஃபாக்ஸ்கான் நிறுவனம் கடந்த சில மாதங்களாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்நிலையில், கர்நாடகாவின் பெங்களூரு விமான நிலையம் அருகே 300 ஏக்கர் பரப்பளவில் புதிய ஆலையை துவங்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
சுமார் ரூ.6 ஆயிரம் கோடி முதலீட்டில் அமைக்கப்படும் புதிய தொழிற்சாலையை ஐபோன்கள் உற்பத்தி செய்யவும், ஃபாக்ஸ்கானின் மின்சார வாகன வணிகத்திற்காக உதிரி பாகங்களை தயாரிக்கவும் பயன்படுத்தலாம் என்றும் புதிய தொழிற்சாலை மூலம் ஒரு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. இதற்கிடையே, ஃபாக்ஸ்கானின் முதலீடு மற்றும் திட்ட விவரங்களை இறுதி செய்யும் பணி நடைபெற்று வருவதால் திட்டங்களில் மாற்றம் வரக்கூடும் என்றும் கூறப்படுகிறது.
Next Post
"வெந்நீர் சொம்பை தட்டிவிட்ட...."! துடிதுடித்த 1 வயது பிஞ்சு! மணப்பாறை அருகே சோகம்!
Fri Mar 3 , 2023
மணப்பாறை அருகே 1 வயது ஆண் குழந்தை வெந்நீர் கொட்டியதால் படுகாயம் அடைந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மணப்பாறை அருகே உள்ள எண் பெருமாள் பட்டியைச் சார்ந்தவர் இளையராஜா (33). இவருக்கு திருமணமாகி ஒரு வயதில் முகின் ராவ் என்ற ஆண் குழந்தை இருந்தது. இந்நிலையில் இளையராஜாவின் மனைவி மட்டக்குறிச்சியில் உள்ள தனது தந்தை வீட்டிற்கு சில நாட்கள் தங்கி வருவதற்காக சென்றிருக்கிறார். கடந்த 28ஆம் […]

You May Like
-
2024-05-08, 4:07 pm
அம்பானி, அதானியிடம் எவ்வளவு ‘டீல்’ பேசப்பட்டது? – ராகுல் காந்தியை விளாசிய மோடி!
-
2024-11-22, 9:20 am
சென்னை : சாலையோர வியாபாரிகளுக்கு ID CARD..!! இன்று முதல் சிறப்பு முகாம்