fbpx

அடித்தது ஜாக்பாட்..!! துபாய் லாட்டரியில் இந்திய டிரைவருக்கு ரூ.33 கோடி பரிசு..!!

துபாயில் நடைபெற்ற லாட்டரி குலுக்கலில் இந்தியாவைச் சேர்ந்த டிரைவருக்கு ரூ.33 கோடி பரிசு கிடைத்துள்ளது.

தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர் அஜய் ஓகுலா. இவர் ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் துபாயில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மாத சம்பளம் 3,200 திர்ஹாம்கள் (இந்திய மதிப்பில் ரூ.71,968). இந்நிலையில், துபாய் நகரில் லாட்டரிச் சீட்டு விற்பனை வெகு பிரபலம் என்பதால், அங்கு தங்கி வேலை செய்யும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் அதிகளவில் லாட்டரி சீட்டுகளை வாங்கி வருகின்றனர். துபாயில் கடந்த மாதம் நடந்த லாட்டரி குலுக்கலில் தமிழர் ஒருவருக்கு ரூ.67 கோடி பரிசு கிடைத்தது.

அடித்தது ஜாக்பாட்..!! துபாய் லாட்டரியில் இந்திய டிரைவருக்கு ரூ.33 கோடி பரிசு..!!

இவ்வாறு இருக்கையில், ஓட்டுநர் அஜய் ஓகுலாவும் 2 பரிசுச் சீட்டுகளை வாங்கியுள்ளார். அதில் அவருக்கு ஜாக்பாட் பரிசாக 33 கோடி ரூபாய் பரிசுத்தொகை கிடைத்துள்ளது. இதுதொடர்பாக துபாயிலிருந்து வெளியாகும் கலீஜ் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அஜய் ஓகுலா கூறுகையில், “எனக்கு லாட்டரி மூலம் ரூ.33 கோடி பரிசு கிடைத்துள்ளதில் மகிழ்ச்சி அடைந்துள்ளேன். என்னால் இதுவரை இந்தச் செய்தியை நம்பவே முடியவில்லை. எனக்கு பரிசு விழுந்த செய்தியை எனது சொந்த ஊரில் உள்ள அம்மா மற்றும் குடும்பத்தினரிடம் கூறிய போது அவர்களும் முதலில் நம்பவில்லை. பரிசு விழுந்த செய்தி தற்போது புகைப்படங்களுடன் ஊடகங்களில் செய்தியாகவே வெளியாகியுள்ளது என்பதால் அவர்கள் நம்பியிருக்கின்றனர்.

இந்தப் பணத்தைக் கொண்டு எனது அறக்கட்டளை பணிகளைத் தொடருவேன். இதன்மூலம் உதவி தேவைப்படும் என்னுடைய சொந்த கிராம மக்களுக்கும், அருகிலுள்ள கிராமங்களில் உள்ள மக்களுக்கும் உதவி செய்வேன்” என்று தெரிவித்தார்.

Chella

Next Post

டிகிரி படித்தவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு..!! இஸ்ரோவில் 526 காலியிடங்கள்..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

Sun Dec 25 , 2022
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 526 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிகளுக்கு பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பணியின் முழு விவரங்கள்: பதவியின் பெயர் பணியிடம் உதவியாளர் 342 ஜீனியர் தனி உதவியாளர் 154 மேல் பிரிவு கிளர்க் 16 ஸ்டெனோகிராஃபர்ஸ் 14 வயது வரம்பு : 09.01.2023 படி 28 வயது வரை இருக்க வேண்டும். OBC 31 வயது மற்றும் […]
டிகிரி படித்தவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு..!! இஸ்ரோவில் 526 காலியிடங்கள்..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

You May Like