இந்தியாவில் மத்திய அரசை தொடர்ந்து மாநில அரசுகளும் தங்களுடைய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கி வருகின்றன. தற்போது மத்திய அரசின் அகலவிலைப்படி உயர்வு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகாத நிலையில், தமிழ்நாடு அரசு ஆவின் பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கான அகலவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழக பால்வள மேம்பாட்டு துறை அமைச்சர் மனோ தங்கராஜ் 1,700 ஆவின் ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு 34 சதவீதத்தில் இருந்து தற்போது 4 சதவீதம் உயர்த்தப்பட்டு 38 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அதே சமயம் தமிழ்நாடு பால் கூட்டுறவு உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு மற்றும் 6 மாவட்ட சங்கங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் இந்த அகல விலைப்படி உயர்வு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இந்த அறிவிப்பால் ஆவின் ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.