வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவும் வகையில் சமூக நலத்துறை அமைச்சர் கோட்டா ஸ்ரீனிவாஸ் பூஜாரி புதிய திட்டம் குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் இருக்கும் ஒவ்வொரு தொகுதியிலும் 100 இருசக்கர வாகனங்கள் வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 28 ஆயிரம் வேலையில்லா இளைஞர்களுக்கு இருசக்கர வாகனத்தை வழங்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அதற்கு வேலையில்லா தாழ்த்தப்பட்ட சாதி மற்றும் பழங்குடியின இளைஞர்கள் சேவா சிந்து போர்ட்டலில் விண்ணப்பிக்கலாம்.

இந்த திட்டம் மூலமாக இருசக்கர வாகனத்திற்கு அரசு சார்பாக ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் எனவும் வங்கி மூலமாக ரூ. 20 ஆயிரம் கடன் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த இருசக்கர வாகனத்தை பயன்படுத்தி வேலையில்லா இளைஞர்கள் மீன்பிடித்தல், காய்கறிகள் மற்றும் ஆடைகள் ஆகியவற்றை விற்பதற்கு சுயதொழில் புரிவதற்கு பயன்படுத்திக் கொள்வார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.