திருச்சி மாவட்டம் முசிறியை வேலம்பட்டியில் வசித்து வருபவர் பாலசுப்பிரமணியன். இவரது மனைவி செல்வி. இந்த தம்பதிக்கு கோபிநாத் (26) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகள் சென்னையில் படித்து வரும் நிலையில், கோபிநாத் டிப்ளமோ படித்து வருகிறார். இவர்களுக்கு சொந்தமான வீடு நாமக்கல் மாவட்டம் அம்பாயி பாளையத்தில் உள்ளது. கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் பாலசுப்பிரமணியன் இறந்துவிட்டதால், தாய் செல்வியும், கோபிநாத்தும் தோட்டத்தில் உள்ள கூரை வீட்டில் தங்கியிருந்து விவசாயம் பார்த்து வந்துள்ளனர்.
இந்நிலையில், வீட்டு வாசலில் கோபிநாத் கட்டிலில் படுத்து தூங்கிக் கொண்டிருந்த நிலையில், நள்ளிரவில் தாய் செல்வி கழிவறைக்கு வெளியே வந்தபோது கட்டிலில் கோபிநாத் தீப்பற்றி எரிந்த நிலையில், சடலமாக கிடந்தார். செல்வியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர், தீயை அணைத்தனர். பின்னர், இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதில் கோபிநாத்தை பெற்ற தாயே கொலை செய்துவிட்டு நாடகமாடியது தெரியவந்தது.
அதாவது, கோபிநாத்திற்கு குடிபழக்கம் இருந்துள்ளது. விவசாயத்திற்காக டிராக்டர் ஒன்று கடனுக்கு வாங்கியுள்ளார். மேலும், வீட்டை விற்று டிராவல்ஸ் தொடங்க வேண்டும் என அவரது தாயாரிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். சம்பவத்தன்று இரவு போதையில் வந்த கோபிநாத், தாய் செல்வியிடம் மீண்டும் தகராறு செய்துள்ளார். பின்னர், கோபிநாத் தூங்கச் சென்றதும் தாய் செல்வி கோடாரியால் அவரது தலையில் தாக்கியுள்ளார். அப்போது, அவர் உயிரிழந்தார். பின்னர், கொலையை மறைக்க மண்ணெண்ணெயை கோபிநாத்தின் உடல் மீது ஊற்றி தீ வைத்தது எரித்துள்ளார். இதையடுத்து, செல்வியை கைது செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Read More : சற்றுமுன்..!! டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு..!! இதோ ரேங்க் லிஸ்ட்..!! எப்படி பார்ப்பது..?