உடல் பருமனைப் பார்த்து பலர் விமர்சனம் செய்துவந்த நிலையில், 5 கிலோ வரை உடல் எடையை குறைத்து மாஸ் காட்டியுள்ள இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மாவின் புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ரோஹித் சர்மா உடல் எடை அதிகமாக இருந்தாலும் பேட்டிங்கில் பட்டையை கிளப்புவார். ஆனால், சமீப காலங்களாக தன்னுடைய விளையாட்டில் அவர் ஓட்டங்கள் எதுவும் எடுக்காமல் பலரது விமர்சனங்களை பெற்று வருகிறார். முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி ஜாம்பவான்களான கபில்தேவ், சுனில் கவாஸ்கர் போன்றவர்கள் கூட ரோஹித் சர்மாவின் உடல் தகுதியை குறித்து கேள்வி எழுப்பியிருந்தனர். அவருடைய தொடர் சொதப்பல்களுக்கு உடல் எடை கூட காரணமாக இருக்கலாம் என்றும், சிலர் இவரு ஒரு வட பாவ் என்று கிண்டலடித்து கமெண்ட் செய்திருந்தனர்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதியில் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா தோல்வி அடைந்தது. இதையடுத்து கிட்டத்தட்ட ஒன்றரை மாதங்கள் வரையில் இந்திய வீரர்கள் ஓய்வில் இருந்தனர். இந்த நிலையில், இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒரு நாள் கிரிக்கெட் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்த தோல்விக்கு பிறகு விடுமுறையை கழிப்பதற்காக ரோஹித் சர்மா தன் குடும்பத்துடன் அமெரிக்காவிற்கு சென்றார். ஓய்வு நேரத்திலும் உடற்பயிற்சியை மேற்கொண்டு உடல் எடை குறைப்பதில் தீவிரம் காட்டி வந்தார். இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது. 5 கிலோ வரை உடல் எடை குறைத்து மாஸ் காட்டியுள்ளார். தாடியையும் ட்ரிம் செய்து பார்ப்பதற்கு ரொம்ப ஃபிட்டாக இருக்கிறார். தற்போது இது தொடர்பான புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த அவரது ரசிகர்கள் வாவ்.. மாஸ் என்ட்ரி… என்று பாராட்டி கமெண்ட் செய்து வருகின்றனர்.