ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் பங்கேற்றதன் மூலம் இந்திய அணி கேப்டன் ஹிட்மேன் ரோகித் சர்ஷமா தனது 50வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறார்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் பங்கேற்றதன் மூலம் இந்திய அணி கேப்டன் ஹிட் மேன் ரோகித் சர்ஷமா தனது 50வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறார்.
மேலும் உலகடெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிபோட்டி தற்போது ஓவல் மைதானத்தில் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்திய அணியின் கிரிக்கெட் கேப்டன் ரோஹித் சர்மாவு இன்று ஆஸ்ரேலியா அணிக்கு எதிராக நடைபெறும் உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிபோட்டியில் விளையாடி வருகிறார். இது தான் அவருடைய 50-வது டெஸ்ட் போட்டி. எனவே, இன்று 50-வது போட்டியில் களமிறங்கிய ரோஹித் சர்மாவுக்கு ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் என பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
இதுவரையில் 49 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ரோகித் சர்மா 83 இன்னிங்ஸ் விளையாடி 3379 ரன்கள் எடுத்துள்ளார். இதில், 9 சதம், ஒரு இரட்டை சதம், 14 அரைசதம் அடங்கும். இந்த ஓவல் மைதானத்தில் ரோகித் சர்மா 127 ரன்கள் எடுத்துள்ளார். அந்த வகையில், இந்தியத் கிரிக்கெட் கட்டுபாடு வாரியம் பிசிசிஐ தனது ட்வீட்டர் பக்கத்தில் சூப்பரான போஸ்டர் ஒன்றை வெளியீட்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளது.