ஜோதிடத்தில் பல்வேறு சுப யோகங்கள் உள்ளன. அதில் ஒன்று தான் லட்சுமி நாராயண யோகம். இந்த யோகமானது புதன் மற்றும் சுக்கிரனின் சேர்க்கையால் உருவாகும். இந்த யோகம் ஒருவரது ஜாதகத்தில் இருந்தால், அவர் மகிழ்ச்சியான மற்றும் செழிப்பான வாழ்க்கையை வாழ்வார். இப்படிப்பட்ட லட்சுமி நாராயண யோகமானது மேஷ ராசியில் உருவாகவுள்ளது. ஏற்கனவே மேஷ ராசியில் சுக்கிரன் பயணித்து வருகிறார். இந்நிலையில், மே 10ஆம் தேதி புதன் மேஷ ராசியில் நுழையவுள்ளார்.
இந்த யோகம் மே 19 ஆம் தேதி வரை இருக்கும். இக்காலகட்டத்தில் சில ராசிக்காரர்கள் நல்ல பண பலன்களையும், தொழிலில் நல்ல வெற்றிகளையும் பெறுவார்கள். இப்போது மேஷ ராசியில் உருவாகும் லட்சுமி நாராயண யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் யார் யார் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 12-வது வீட்டில் லட்சுமி நாராயண யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் புதிய வருமானத்தைப் பெறுவார்கள். பண பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். குடும்ப தேவைகளை நிறைவேற்றுவீர்கள். நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்கும். லட்சுமி தேவியில் அருளால் ஒவ்வொரு வேலையிலும் வெற்றி கிடைக்கும். நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவீர்கள். உடன் பிறந்தவர்களிடையே இருந்த பிரச்சனைகள் நீங்கும். முதலீடுகளை செய்தால் நல்ல லாபம் கிடைக்கும். குழந்தைகளால் சில நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். வெளிநாடுகளில் வேலை செய்பவர்களுக்கு சிறப்பாக இருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசியின் 9-வது வீட்டில் லட்சுமி நாராயண யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் நீண்ட நாள் பிரச்சனைகள் முடிவுக்கு வரும். நிலுவையில் உள்ள வேலைகள் முடியும். கடனாக கொடுத்த பணம் கைக்கு வந்து சேரும். புதிய வாகனம் மற்றும் சொத்துக்களை வாங்கும் வாய்ப்புகள் கிடைக்கும். அனைத்து துறைகளிலும் வெற்றி பெறுவீர்கள். நிறைய பணத்தை சேமிக்க முடியும். வேலை மற்றும் வியாபாரம் தொடர்பான பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். இப்பயணம் நல்ல நிதி நன்மைகளை வழங்குவதாக இருக்கும்.
மிதுனம்
மிதுன ராசியின் 11-வது வீட்டில் லட்சுமி நாராயண யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். நீண்ட நாட்களாக சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும். பணிபுரிபவர்கள் சிறப்பான செயல்திறனால் வேலைகள் அனைத்தையும் திறம்பட முடிப்பார்கள். ஏற்கனவே முதலீடுகளை செய்திருந்தால், அதில் நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரிகளுக்கு எதிர்பாராத அளவில் நல்ல லாபம் கிடைக்கும்.
Read More : நீங்க செகண்ட் ஹேண்ட் கார் வாங்கப் போறீங்களா..? அப்படினா இந்த விஷயங்களை செக் பண்ணுங்க..!!