பல்வேறு மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர்களுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று ஆலோசனை நடத்தி வருகின்றார்.
அந்த வகையில், தலைநகர் டெல்லியில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா உள்ளிட்ட உள்துறை அமைச்சக அதிகாரிகள் தேசிய பேரிடர், மேலாண்மை ஆணையம் தேசிய பேரிடர் மீட்பு படை உள்ளிட்டவற்றின் மூத்த அதிகாரிகளும் பங்கேற்றுக் கொண்டுள்ளனர்.
பேரிடர் மேலாண்மையின் அடுத்த கட்டத்தை எதிர்கொள்வதற்கான தயார் நிலை தொடர்பாக கூட்டத்தில் பேசப்பட இருக்கிறது. பேரிடர் மேலாண்மையில் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாகவும் ஆலோசனை செய்யப்படுகின்றது.
தற்போது அரபிக் கடலில் பிபர்ஜாய் புயல் ஏற்பட்டிருக்கின்ற நிலையில், இந்த கூட்டம் நடைபெறுகிறது. இதனை அடுத்து பிபர்ஜாய் புயல் குறித்து குஜராத் மாநில முதலமைச்சர் பூபேந்திர பட்டேல் மற்றும் 8 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் உள்துறை அமைச்சர் என்று பிற்பகலில் ஆலோசனையின் நடத்த இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது.