2025-ன் முதல் வாரத்தில் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் மகிழ்ச்சியான ஆரோக்கியமான மற்றும் வளமான புத்தாண்டை வரவேற்று காத்திருக்கின்றனர்.. ஆனால் சீனா மீண்டும் உலகளவில் கவனம் ஈர்த்துள்ளது. சீனாவில் மனித மெட்டாப்நியூமோவைரஸ் என்று அழைக்கப்படும் HMPV வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இது மற்றொரு COVID-19 போன்ற பெருந்தொற்றை ஏற்படுத்துமா என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
HMPV உலகளாவிய அச்சுறுத்தலாக மாறுவதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என்றாலும், 2019 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் சீனாவில் தோன்றி 2020 ஆம் ஆண்டின் முதல் மாதங்களில் உலகம் முழுவதும் பரவிய கோவிட்-19 பரவியதற்கும் இந்த வைரஸுக்கு இடையே பல ஒற்றுமைகள் உள்ளன.
இதனிடையே சமூக ஊடகங்களில் பிரபல இந்திய ஜோதிடரான அனிருத் குமார் மிஸ்ராவின் பழைய பதிவு மீண்டும் வைரலாகி வருகிறது. அதில், 2025-ல் மற்றொரு பெருந்தொற்று பரவும் என்று 2022-ம் ஆண்டே அவர் கணித்துள்ளார்.
அவரின் பதிவில் “ ஒரு புதிய தொற்றுநோய் ஏப்ரல் 2025-ல் தாக்கும். இது உலக மக்கள்தொகையில் பெரும்பாலானவர்களை சைவ உணவு உண்பவர்களாக மாற்றும். அதைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்கு முன் 4 ஆண்டுகள் 5 மாதங்களுக்கு நோய் பரவல் இருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
![](https://1newsnation.com/wp-content/uploads/2025/01/tweet.png)
அதே போல் கடந்த 2023-ம் ஆண்டு பதிவில் “ விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவும் புதிய நோயை அடுத்த ஆண்டு சீனா எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இருப்பினும், இது முக்கியமாக சீனாவிற்கு மட்டுப்படுத்தப்படும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
சீனாவில் தற்போது HMPV வைரஸ் பரவி வரும் நிலையில் அவரின் கணிப்பு மீண்டும் இணையத்தில் விவாத பொருளாக மாறியுள்ளது.
தன்னை வேத ஜோதிடர் என்று கூறிக்கொள்ளும் மிஸ்ரா, எதிர்கால நிகழ்வுகளை துல்லியமாக கணிப்பாரா என்றால் இல்லை என்பதே பதில். அவர் கடந்த காலங்களில் பல கணிப்புகளை செய்துள்ளார். அதில் 2011 ஒருநாள் உலகக் கோப்பை போட்டியை இந்தியா வென்றது, அயோத்தி தீர்ப்பு, 370 வது பிரிவு மற்றும் வெள்ளை மாளிகைக்கு டிரம்ப் திரும்புவது உட்பட சில கணிப்புகள் அப்படியே நடந்தன.
ஆனாலும் மிஸ்ரா பல சந்தர்ப்பங்களில் தவறான கணிப்புகளையும் செய்துள்ளார். இந்தியா 2023ல் உலகக் கோப்பையை வெல்லும் என்று கூறியது, ரஷ்யா-உக்ரைன் போர் நடக்காது என்று கூறியது., 2019ல் நம்பிக்கை வாக்கெடுப்பில் தேவேந்திர ஃபட்னாவிஸ் வெற்றி பெறுவார் என்று அவர் கணித்த பல கணிப்புகள் உண்மையாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Read More : சீனாவை அச்சுறுத்தும் HMPV வைரஸ்.. கோவிட்-ஐ போலவே ஆபத்தானதா..? நோயை எப்படி தடுப்பது..?