fbpx

Hockey World Cup 2023..!! ஆடவர் உலக கோப்பை ஹாக்கி போட்டிகள் இன்று தொடக்கம்..!!

ஆடவர் உலக கோப்பை ஹாக்கி-2023 போட்டி ஒடிசாவில் இன்று தொடங்குகிறது.

2023ஆம் ஆண்டுக்கான உலகக்கோப்பை ஆடவர் ஹாக்கி போட்டிகள் ஒடிசாவில் இன்று தொடங்குகிறது. இதற்கான முன்னேற்பாடுகளை நவீன் பட்நாயக் தலைமையிலான அரசு சிறப்புடன் செய்துள்ளது. கடந்த 2018இல் நடந்த உலக கோப்பை ஆடவர் ஹாக்கி போட்டியில் இந்திய அணி வெற்றி வாகை சூடியது. அதன்பின்னர் கொரோனா காரணமாக உலகக் கோப்பை போட்டிகள் எதுவும் நடைபெறவில்லை. இந்நிலையில், ஆடவர் உலக கோப்பை ஹாக்கி தொடர் 2023 லீக் சுற்று போட்டிகள் ஒடிசா மாநிலத்தின் புவனேஷ்வர் மற்றும் ரூர்கேலா நகரங்களில் இன்று முதல் தொடங்குகிறது.

Hockey World Cup 2023..!! ஆடவர் உலகக்கோப்பை ஹாக்கி போட்டிகள் இன்று தொடக்கம்..!!

கடந்த 11ஆம் தேதி இந்த ஆண்டு உலக கோப்பை தொடருக்கான பிரம்மாண்ட தொடக்க விழா நடைபெற்று முடிந்த நிலையில், இன்று இரவு 7 மணிக்கு, ரூர்கேலாவில் புதிதாக கட்டமைக்கப்பட்டுள்ள பிர்சா முண்டா சர்வதேச மைதானத்தில் இந்திய அணி ஸ்பெயின் அணியை எதிர்கொள்கிறது. முன்னதாக மதியம் ஒரு மணிக்கு அர்ஜென்டினா அணி தென் ஆப்பிரிக்காவையும், மதியம் 3 மணிக்கு ஆஸ்திரேலிய அணி பிரான்ஸ் அணியையும், மாலை 5 மணிக்கு இங்கிலாந்து அணி வேல்ஸ் அணியையும் எதிர்கொள்கின்றன.

Chella

Next Post

மின்சார வாகனம் வாங்கப் போறீங்களா..? 50 முதல் 100 சதவீதம் வரை..!! கண்டிப்பா இதை தெரிஞ்சிக்கோங்க..!!

Fri Jan 13 , 2023
தமிழகத்தில் மின்சார வாகனத்தின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக கடந்த 2020ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி முதல் மின்சார கொள்கை அமலுக்கு வந்தது. இதனால், தமிழகத்தில் மின்சார வாகனம் வாங்குபவர்களுக்குச் சாலை வரி, வாகனப் பதிவுக் கட்டணத்தில் 50% முதல் 100% வரை விலக்கு அளிக்கப்பட்டு வந்தது. இதற்கிடையே, அவை டிசம்பர் 31-ம் தேதியுடன் முடிவுக்கு வந்த நிலையில் மின்சார வானங்களின் விலை 15 சதவிகிதம் வரை உயர வாய்ப்புள்ளதாகத் […]
மின்சார வாகனம் வாங்கப் போறீங்களா..? 50 முதல் 100 சதவீதம் வரை..!! கண்டிப்பா இதை தெரிஞ்சிக்கோங்க..!!

You May Like