fbpx

உலகக்கோப்பை ஹாக்கி..!! இறுதிவரை விறுவிறு போட்டி..!! 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது ஜெர்மனி..!!

உலகக்கோப்பை ஹாக்கி தொடரில் ஜெர்மனி அணி 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளது.

15-வது உலகக் கோப்பை ஹாக்கி தொடர் கடந்த ஜனவரி 13ஆம் தேதி தொடங்கி, ஒடிசாவில் உள்ள புவனேஸ்வர் மற்றும் ரூர்கேலாவில் கோலாகலமாக நடைபெற்று வந்தது. இந்த தொடரில் பங்கேற்ற 16 அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெற்றன. அனைத்து லீக், காலியிறுதி மற்றும் அரையிறுதி முடிவில் நடப்பு சாம்பியன் பெல்ஜியம் அணியும், முன்னாள் சாம்பியனான ஜெர்மனியும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இறுதிப்போட்டியில் பெல்ஜியம்-ஜெர்மனி அணிகள் நேருக்குநேர் மோதின. இப்போட்டியில் முதல் 2 கோல்களை பெல்ஜியம் பதிவு செய்த நிலையில், ஜெர்மனி எந்த கோலையும் பதிவு செய்யவில்லை.

ஆட்ட நேர முடிவில் 3-3 என்ற கோல் கணக்கில் இரு அணிகளும் சமநிலை வகிக்க, பெனாலிடி சூட் அவுட் முறைக்கு ஆட்டம் சென்றது. தொடர்ந்து பெனால்டி ஷூட்அவுட் முறை நடத்தப்பட்டது. இதில் பெல்ஜியம் 4 கோல்கள் அடித்த நிலையில், ஜெர்மனி 5 கோல்களை அடித்து வெற்றி பெற்றது. இதன் மூலம் ஜெர்மனி அணி 3-வது முறையாக உலக ஹாக்கி தொடரில் சாம்பியன் பட்டம் வென்றது.

Chella

Next Post

ரயில் பெட்டியில் இருக்கும் இந்த குறியீடை கவனிச்சிருக்கீங்களா..? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க..!!

Mon Jan 30 , 2023
ரயில் போக்குவரத்து விலை மலிவான ஒரு சுவாரஸ்யமான பயணம். ரயிலில் உள்ள ஒவ்வொரு அமைப்பும் ஒவ்வொரு செய்திகளை சொல்லும். அப்படி ரயிலில் ஏறும் முன்பு பெட்டியின் வெளிப்புறத்தில் மஞ்சள் நிற சாய்வு கோடுகளை சில பெட்டியில் பார்த்திருப்பீர்கள். அவை எதற்காக என்பது உங்களுக்கு தெரியுமா? அது குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம். இந்தியாவில் முதன் முதலில் தொடங்கப்பட்ட மும்பை முதல் தானே இடையிலான ரயில் சேவை முதல் தற்போது வரை […]

You May Like