fbpx

Holiday | மார்ச் 14ஆம் தேதி உள்ளூர் விடுமுறை..!! மாணவர்களுக்கும் லீவா..? ஆட்சியர் முக்கிய அறிவிப்பு..!!

தமிழ்நாட்டில் குறிப்பிட்ட மாவட்டங்களில் கொண்டாடப்படும் பண்டிகைகள் மற்றும் திருவிழாக்களை கருத்தில் கொண்டு அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் உள்ளூர் விடுமுறை அளிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், வரும் மார்ச் 14ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் கோவில் திருவிழா திருத்தேர் உற்சவம் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக மார்ச் 14ஆம் தேதியன்று ஒரு நாள் மட்டும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக மார்ச் 23ஆம் தேதி பணி நாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 14ஆம் தேதி பள்ளி மாணவர்களுக்கு முன்னதாக தேர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்தால், திட்டமிட்டபடி தேர்வு நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More : BJP | வாரணாசியில் பிரதமர் மோடி, காந்தி நகரில் அமித்ஷா போட்டி..? வெளியாகும் பாஜக வேட்பாளர்கள் பட்டியல்..!!

Chella

Next Post

Annamalai | மக்களவை தேர்தலில் அண்ணாமலை எந்த தொகுதியில் போட்டி..? அவரே சொன்ன பரபரப்பு தகவல்..!!

Fri Mar 1 , 2024
பாஜகவை பொறுத்தவரை எல்லாம் மக்கள் சேவைதான். மேலிடம் இதை செய் என்று கூறினால், அதை நான் செய்வேன் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலில் அண்ணாமலை போட்டியிடப் போவதாக தகவல் வெளியாவது குறித்து அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், ”பாஜக இன்று வரை எனக்கு ஒரு பொறுப்பு கொடுத்திருக்கிறது. அதை செய்து கொண்டிருக்கிறேன். இன்று வரை என்னுடைய பொறுப்பு, அனைத்து மாவட்டங்களுக்கும் செல்வது. பாஜகவை பொறுத்தவரை […]

You May Like